Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesha Rasi Sani Peyarchi 2022: கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!

Manoj Krishnamoorthi May 05, 2022 & 13:00 [IST]
Mesha Rasi Sani Peyarchi 2022: கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!Representative Image.

நவகிரகத்தில் சனிபோல் நன்மையை அளிக் கொடுப்பது யாருமில்லை என்பது பொதுவாகக் கூறும் கருத்து ஆகும். நாம் செய்யும் காரியத்தின் கர்ம வினைகளுக்கு தகுந்த பயனை அளிக்கும் சனிபகவான் தன்னுடைய மூல ஸ்தானமான கும்ப ராசிக்கு ஏப்ரல் 29, 2022 அன்று இடம் மாறியதால் மேஷத்துக்கு ஏற்படும் பலன்கள் பற்றிக் காண்போம். 

மேஷ ராசியின் சனி பெயர்ச்சி பலன் (Mesha Rasi Sani Peyarchi 2022)

பொது பலன்

இந்த 2022 சனிப்பெயர்ச்சி மேஷ ராசிக்குச் சாதகமாக இருக்கிறது, மேஷ ராசிக்கு 11வது வீட்டில் அடியெடுத்து வைக்கும் சனிபகவான், வருமானத்தை வளமாக்குவார். வியாபாரம் செய்பவரின் லாப ஸ்தானம் உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 11 வது வீட்டில் சனிபகவான் இருப்பது கடின உழைப்பிற்கான பலனை வெற்றியாக மாற்றுவார். அதன்பின் 12.07.2022 முதல் மகர ராசியில் சஞ்சாரம் கொள்வது சிறிய கடினமான சூழ்நிலையைத் தரும். உங்கள் வேலைச்சுமை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. இந்த கடினமான நிலை 23.10.2022 வரை உங்களுக்கு இருப்பதை  ஒரு முன்னேற்றத்தின் பாடமாக ஏற்கொள்வது சாதகமான மனநிலையாகும்.

குடும்ப வாழ்க்கை

நீங்கள் எதிர்பார்த்த அமைதியான சூழல் உங்கள் குடும்பத்தில் நிலவும், சில சமயம் சிறிய ஊடல்கள் இருந்தாலும்  குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்காது. சொந்தபந்தம் சுற்றத்தார் மத்தியில் உங்கள் மீது நல்ல மதிப்பு உருவாகும், திருமண வயது மேஷ ராசியினருக்கு திருமண முயற்சிகள் வெற்றி காணும். திருமண வாழ்வில், இல்லறம் ஓரளவு நன்றாக இருக்கும். திருமண பந்தத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொள்ளுவீர்கள்.  

தொழில்

சனி பகவான் 11 வது வீட்டில் இருப்பது உங்கள் தொழிலில் உங்களுக்கான அங்கீகாரத்தையும் முன்னேற்றத்தையும் அளிப்பார். இதுவரை உழைத்த கடுமையான முயற்சி நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருந்தவருக்கு  கண்ணியமான வேலைக் கிடைக்கும், வியாபாரத்தில் புதிய வேலையைத் தொடங்குவது ஜெயத்தை அளிக்கும். தொழிலில் வளர்ச்சி காண அயராது உழைக்க வேண்டும். போட்டித் தேர்வு எழுதும் மேஷ ராசிக்காரருக்கு வெற்றி கிடைக்கும். இந்த 2022 சனி பெயர்ச்சி மேஷத்துக்குத் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும். 

கல்வி

சனி சஞ்சாரத்தினால் மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறக் கூடுதல் முயற்சி அளிக்க வேண்டும். மேற்படிப்பு வெளிநாடு செல்ல விருப்பம் கொள்பவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி வெளிநாடு செல்லும் யோகத்தை ஏற்படுத்தும். ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கொள்ளும் மாணவர்களுக்கு உங்கள் முக்கியமான சோதனை வெற்றி அடையும்.  

செல்வ நிலை

சனி பெயர்ச்சி பண வரவை அதிகமாக அளிக்கும், இதுவரை இருந்த நிதி நெருக்கடி குறையும். வாகனம் அல்லது புதிய மனை போன்ற சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சனி பெயர்ச்சி  அளிக்கும் மிதமான வளர்ச்சி ஆடம்பர செலவுகளால் செலவு ஆகும். 

உடல்நலம்

இதுவரை இருந்த உடல்நலக் கோளாறுகள் கொஞ்ச கொஞ்சமாக தீரும், ஆரோக்கியம் மேம்படும். இந்த சனி பெயர்ச்சியில் பெரியதாக மருத்துவ செலவுகள் எதுவும் இருக்காது. 

பரிகாரம்

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அனுமன்  வழிபாடு செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமை அன்று காகத்துக்கு உணவளித்தல் நன்மை அளிக்கும்.  

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்