Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Mithuna Rasi Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு இந்தமாதிரியான பலனா!

Manoj Krishnamoorthi May 09, 2022 & 13:30 [IST]
Mithuna Rasi Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு இந்தமாதிரியான பலனா!Representative Image.

மனித வாழ்வில் தன்னம்பிக்கையும் நம்பகத்தன்மையும் மிகமிக அவசியமாகும், இவ்விரண்டும் அதிகம் கொண்ட மிதுன ராசியின் 2022 சனி பெயர்ச்சி பற்றிக் காண்போம். சனி பகவான் 29.04.2022  அன்று கும்ப ராசிக்கு வந்து சஞ்சரித்ததால் ஏற்படும் பலன்கள் பற்றி இவ்வாகாசத்தில் காண்போம். 

மிதுன ராசியின் சனி பெயர்ச்சி பலன் (Mithuna Rasi Sani Peyarchi 2022)

பொது பலன்

தன்னம்ம்பிகையும் விடாமுயற்சியும் அதிகம் கொண்ட உங்களுக்கு 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 29ம் நாளிலிருந்து ஜூலை 12, 2022 வரை கும்பத்தில் இருப்பது லாப ஸ்தானமாகும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். 8 ஆம் வீட்டில் சனியின் வக்கிர பார்வை 2022 வருடம் அக்டோபரில் இருப்பது ஒரு சில சிக்கலைத் தந்தாலும், வரவு அளிப்பதை நிறுத்தாது. அமைதியான இல்லறம், நிம்மதியான செல்வ நிலை போன்ற பல நற்பலனைத் தரும். 

குடும்ப வாழ்க்கை

குடும்பத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கும் மிதுன ராசிக்காரரே இந்த வருட 2022 சனி பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவ்வப்போது குடும்பத்தில் சிறு சண்டைகள் உதித்தாலும் நிம்மதிக்கு குறியிருக்காது. இரத்த சொந்தத்தின் மூலம் ஆனந்தம் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உருவாகும் சிக்கல் திருமணமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. திருமண வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கும், இணக்கமான உறவு ஏற்படும்.  

தொழில்

சனி பகவானின் கும்ப ராசி சஞ்சரிப்பு உங்கள் தொழிலுக்கு கலவையான பலனையே தரும், வாழ்வின் லட்சியத்தை அடைய மிகவும் கடுமையான முயற்சி தேவைப்படும். முன்னேற்றத்திற்காக உழைப்பதால் வேலைச் சுமை அதிகமாக இருப்பதாகத் தோன்றும்.  உத்தியோகத்தில் சிறிய சரிவு ஏற்படும், உங்கள் முக்கியத்துவம் மறுக்கப்பட்டதாக உணருவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதிகமான அலைச்சலுக்கு பிறகுதான் வேலைக் கிடைக்கும்.  செல்வ நிலையில் பெரியதாகக் குறையிருக்காது. செல்வ நிலை நன்றாக இருந்தாலும் அதிகமான செலவுகள் இருக்கும்.  

கல்வி

மாணவ மாணவிகளின் கல்வியில் மிகச் சிறப்பான நிலை இருக்கும். எதிர்பாராத ஊக்கத் தொகை கல்விக்கு மிகவும் உதவும். அரசு வேலைக்கு அல்லது கல்வி நிறுவன சேர்க்கை தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி கொள்ள அதிகமான விடாமுயற்சி தேவைப்படும். கணினித் துறையில் கல்வி கற்கும் மிதுன ராசிக்கார மாணவர்களுக்கு இந்த ஆண்டு சனி பெயர்ச்சியில் ஜெயம் உண்டாகும்.  

மேலும் படிக்க: சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா! என்பதைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்!

உடல்நலம்

மிதுன ராசிக்காரரின் ஆரோக்கியத்துக்கு 2022 சனி பெயர்ச்சி எந்த கெடும் விளைவிக்காது. ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவதிபட்ட மிதுன ராசிக்காரரே இந்த சனி பெயர்ச்சி முற்பாதி உங்களுக்கு மருத்துவச் செலவை அளிக்கும். பெரிய அளவு உடல் கோளாறு இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்தினருக்கு மன உளைச்சலைத் தரும்.   

பரிகாரம்

  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று காகம் அல்லது வேறு பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும்.   
  • சனி பகவானுக்கு முன் கருப்பு அல்லது பச்சை நிற ஆடைகளைப் படைத்து பூஜித்து அணிந்து கொள்ள வேண்டும். 
  • சிவசக்தி வழிபாடு அவசியமாகும்.  

இதுபோன்ற செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்