Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Peace Of Mind Meditation | இதுதான் ஆன்மீகமா ! ஆன்மீக முறை இவ்வளவு எளியதா!

Manoj Krishnamoorthi March 09, 2022 & 12:30 [IST]
Peace Of Mind Meditation | இதுதான் ஆன்மீகமா ! ஆன்மீக முறை இவ்வளவு எளியதா!  Representative Image.

ஆன்மீகம் என்பது தினமும் இறைவனை வழிபடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அதுவா ஆன்மீகம் சற்று சிந்தித்து பாருங்கள் இறை வழிபாட்டின் நோக்கத்தை  நன்கு உணர்ந்த பெரியோர்கள் இக்கூற்றை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவ்வாசகத்தில் ஆன்மீகம் என்றால் என்ன அதன் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகவும் விரிவாகவும் காண்போம்.

ஆன்மீகம் என்பது ஆன்மாவை உணர்ந்து அதன் செயல்பாட்டை அறியும் மன அறிவியல் முயற்சியாகும். இன்று இருக்கும் சூழல்  மத வழிபாட்டையும் மத நம்பிக்கையும் ஆன்மீகம் என்ற பிம்பத்தைக் கொண்டுள்ளது. இதன் உண்மையான முகம் மனிதன் தன் உடலிலுள்ள ஆன்மாவை உணர்ந்து மனதையும் உடலையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவதாகும். ஆன்மீகம் என்பது ஒருவன் தன் ஐம்புலங்களையும் ஒரு நிலையில் மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சி ஆகும்.

ஆன்மீகத்தை பற்றி  விரிவாகக் கூறப்போனால்  அது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மனிதன் தனக்குள் இருப்பதை அறிந்து வெளி புணர்வு செய்யும் முறையாகும். நம்மில் பல அமானுஷ்யத்தை உணர்ந்திருப்போம் சில சமயம் நம்மை எதோ தொடுவதுபோலவும் உணர்ந்திருப்போம், அதுவே நாம் ஆன்மாவை உணர்ந்ததற்கான  அறிகுறியாகும். ஆன்மீகத்தை மத ஸ்தலத்தில் தேடுவதை விட ஒருவன் தனக்குள் தேடுவதே ஆன்மீகமாகும்.

ஆன்மீகம் பற்றிய தகவல் பல்வேறு புரிதலைக் கொண்டதாகும், மனிதாபிமானமே ஆன்மீகமென்றும் தெய்வீக உணர்வே ஆன்மீகமென்றும் புரிதல் இல்லாத வெற்று இடமே ஆன்மீகமென்றும் கூறப்படுகிறது. இவையாவும் உணர்த்துவது மனிதன் உலகியலை தன் மனதால் அறுந்துகொள்வது ஆகும்.

 Peace Of Mind Meditation 

மனித உணர்வோடு கலந்தது  ஆன்மீகம், அதன் வெளி புணர்வும் முறை எளியதாகும், ஒருவன் முறையாக  பயிற்சித்தால்  ஆன்மாவை உணர ,முடியும். அதற்கு  நாம் முதலில் தியானத்தைக் கைப்பிடிக்க வேண்டும். தியானம் செய்வதும் தினமும் சரியான முறையில் சரியான நேரத்திற்கு வழக்கமான  பழக்கமாகவே மாற்றிக்கொள்ள வேண்டும். தியானம் செய்வதன் மூலம் நாம் உணர்ச்சி மேம்படும், ஆத்மா பொளிவு பெறும், உணர்ச்சி மேம்படுத்தல் என்பது என்னவென்றால் பாசிட்டிவ்வான எண்ணங்களைத் தருவதாகும்.

மன நிம்மதி அடைவது ஆன்மீகமாகக் கருதலாம், நிம்மதியான மனம்  தெளிவான பாதைக்கு வழிகாட்டும். சரியான பாதையில் மனிதன் செல்வது தான் ஆன்மீகத்தின் முக்கியமான நோக்கமாகும். மானிட வாழ்வை நல்வழியாக்கப் பின்பற்றும் முறைதான் ஆன்மீகம் எனக் கூறி தெய்வீகமாக வழிபடச் செய்தனர் நம் முன்னோர்கள்.

Best Direction to Meditate in Tamil

தியானத்தின் மூலம் நம் ஆன்மாவின் ஆற்றலை அறிய முடியும் என்பது அறிந்ததே ஆகும், தியானம் செய்வதற்கென வழிமுறைகள் இருக்கிறது. முதலில் தியானம் செய்வதற்கு முன்  ஒருவர் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி அமர்தல் வேண்டும். இப்படி அமரும் திசையில் தான் பூமியின் காந்த ஆற்றல் உருவாகும், அந்த ஆற்றல் நம் உடலுக்கு அவசியமாகும். உடல் நலத்திற்கு இந்த காந்த சக்தி உதவியாக இருக்கும். உடல் நலமாக வைக்க ஆன்மா தெளிவாக இருக்க வேண்டும். இவ்வாறு ஆன்மாவைத் தெளிவு பெறச் செய்வதே தியானத்தின் கடமையாகும்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்