Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Puthra Bhagyam in Tamil: நீண்ட நாளா குழந்தை இல்லையா!.. இந்த பரிகாரம் செய்வதால் குழந்தை வரம் கிடைக்கும்..

Manoj Krishnamoorthi April 16, 2022 & 10:45 [IST]
Puthra Bhagyam in Tamil: நீண்ட நாளா குழந்தை இல்லையா!.. இந்த பரிகாரம் செய்வதால் குழந்தை வரம் கிடைக்கும்..Representative Image.

"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்" என்பது ஆன்றோர் கூறும் வாழ்த்து ஆகும், அப்படி பதினாறு செல்வத்தில் மிகவும் முக்கியமான செல்வம் மழலைச் செல்வம் ஆகும்.  திருமணம் என்ற சுப ஆரம்பத்தில் தன் வாழ்வின் அர்த்தமாக வாரிசு அடைவதே சுபமாகும். பதினாறு செல்வத்தில் மற்ற செல்வங்கள் இல்லை என்றாலும் கஷ்டப்பட்டு வாழ்வை நடத்த முடியும், ஆனால் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பது வேறு எந்த செல்வம் கொண்டு இருந்தாலும் அர்த்தமற்ற வாழ்வாக இருக்கும். 

இன்று நகரும் நாகரிகத்தில் உலகம் ஓடும் வேகத்தில் நாம் ஓடிக் கொண்டு இருந்தாலும் நம் வாழ்வின் அடித்தளமான குடும்பம் வாழ்வு மாறாமல் இருப்பதால் தான் நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதை நினைவில் வைத்திருக்கிறோம். இன்று நம்மில் பல பேர் குழந்தை பாக்கியத்திற்கு ஏக்கம் கொள்வது சாதாரணமான விசயம் ஆயிற்று, குழந்தை பாக்கியம்

கிடைக்காதோர் செய்ய வேண்டிய பரிகார பூஜைகள் பற்றிக் காண்போம்.

குழந்தை பாக்கியமின்மை பரிகாரம் (Puthra Bhagyam in Tamil)

திருமணம் பந்தத்தின் அடுத்த கட்டம் குழந்தைப் பேறு, இது திருமணமான ஒரு  ஆண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள் நடக்கவில்லை என்றால் சுற்றத்தார் வசை பாடுவது ஆரம்பிக்கக் கூடும். அந்த மாதிரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவது சிறந்த தீர்வுதான் என்றபோதும் தம்பதியினரின் ஜாதகத்தில் எதாவது தோஷம் இருக்கிறதா என்று பார்ப்பதும் உசிதமான செயலாகும்.

பொதுவாகக் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கச் சுக்கிர பகவனின் பார்வை அவசியமாகும், சுக்கிரனின் பார்வையில்லாத போது குழந்தை பாக்கியம் தாமதமாகும். குழந்தை பாக்கியம் பெற செய்ய வேண்டிய பரிகாரம் மற்றும் விரதங்களைப் பின்பற்றுவோம்.

1. ஆலமரம்

சாஸ்திர அடிப்படையில் ஆலமரம்  சிவபெருமானாக கருதப்படுகிறது, குழந்தைப் பேறு இல்லாத கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இம்மரத்தின் கீழ் அமர்ந்து சிவ பெருமானை நினைத்து தவம் செய்ய வேண்டும். ஆலமரத்தில் இருந்து வரும் சாத்வீக காந்த அதிர்வுகள் குழந்தை பாக்கியம் இல்லாத ஆடவருக்கு ஆண்மையை அதிகரிக்கும்.  

2. கோ மாதா வழிபாடு

கோ மாதா பூஜை செய்தல் வேண்டும்,  ஒரு யாமம் தண்ணீரில் ஊற வைத்த நவதானியத்தை வெல்லம் உடன் சேர்த்து அரைத்து பசுவுக்கு உண்ணச் செய்வது நாம் அறியாது செய்த கர்ம வினைகளை அகற்றி புத்திர பாக்கியம் தரும். 

3. கிருத்திகை விரதம்

கிருத்திகை தினத்தன்று அதிகாலையில் உணவை உட்கொண்டு சூரியன் மறைவு வரை முருகப் பெருமானை ஒருமனதாக நினைத்து விரதம் கொள்ள வேண்டும். கிருத்திகை விரதம் இருந்து உங்களால் முடிந்த தானத்தை எளியோருக்குச் செய்வதால் முருகன் மனம் இறங்கி குழந்தைப் பேறு வரம் அளிப்பார். 

4. செல்ல வேண்டிய முக்கிய ஸ்தலம்

கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் உள்ள கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்மனை மனமார வணங்கி பிரசாதமாகத் தரும் விஷேச மஞ்சளை குழந்தை பாக்கியமில்லாத பெண்கள் தினமும் முகத்தில் பூசி குளித்து வர குழந்தை பாக்கியம் கிடைக்க அம்மன் வழி செய்யும்.

 

ஆரணி மாவட்டத்தில் உள்ள புதுக்காமூர் புத்திரகாமேஸ்வரர் சன்னிதானத்திற்குச் செல்லுதல் குழந்தை பாக்கியம் தரும், இந்த திருக்கோயிலில் குடிகொண்ட சிவனைத் தசரத மன்னன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்த பின்னர் வணங்கியதால் தான் அவருக்கு ராமன் உட்பட நான்கு புத்திரர்கள் பிறந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்