Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

இதுவரை கட்டி காத்த மரியாதை சீர்குலையலாம் கவனமாக இருங்கள்!| Rishabam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
இதுவரை கட்டி காத்த மரியாதை சீர்குலையலாம் கவனமாக இருங்கள்!| Rishabam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

இதுவரை கட்டி காத்த மரியாதை சீர்குலையலாம் கவனமாக இருங்கள்!| Rishabam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 ரிஷபம்:

ரிஷப ராசிக்கு சனி பகவான் 10-ம் வீட்டில் வக்கிர நிலை அடைய போகிறார். எனவே, இந்த காலகட்டத்தில் எந்த செயலாக இருந்தாலும் கவனத்துடன் செயல் பட வேண்டும். தொழில் சார்ந்த விஷயங்களில் சில ஏற்றம் இறக்கமான சூழ்நிலை தென்படும். முதலீடு செய்பவராக இருந்தால் இந்த காலகட்டத்தில் அதனை தவிர்ப்பது நல்லது. தொழில் அல்லது இன்வெஸ்ட்மென்ட் செய்பவர்களுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நிம்மதியற்ற நிலையில் காணப்படுவீர்கள். வேலை மாற்றத்திற்கான யோசனைகள் தோன்றும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்வது நல்லது.

சுப காரியங்களில் செலவுகள் ஏற்படலாம் அல்லது கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் பல நெருக்கடிகள் ஏற்படும். அதனால் நீங்கள் நினைத்தது நடக்க தடங்கல் உண்டாகும். ஆகையால் தேவையற்ற செலவுகளை குறைப்பது உத்தமம். சேமிப்புகளில் கவனத்தை செலுத்தினால் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம். ஆசைகள் அதிகரிக்கும் காலமாக இருக்கும். அதில் இருந்து மீண்டு வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்ய முயற்சி செய்யுங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

மனக்கவலையுடன் காணப்படுவீர்கள். நிம்மதி இல்லாமல் எதையோ நோக்கி ஓடிக்கொண்டே இருப்பது போல தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வி பயிலும் மாணவர்கள் இரட்டை சிந்தனையால் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பீர்கள். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செய்யும் வேளையில் கவனமாக செயல் படுங்கள். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு மற்றும் ஒரு பிடிமானம் இல்லாதது போல இருப்பீர்கள். எனவே, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் வாழ்க்கை சிறப்பாக அமையும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணத் தடை சற்று காலம் நீடிக்கும். நண்பர்களுடன் பிரச்சனை மற்றும் நண்பர்களால் பிரச்சனை என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்