நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
கன்னி ராசி நேயர்களுக்கு முன் கோபத்தை விடுத்து பொறுமையாக செயல்படுவதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். முக்கியமான முடிவுகளை சிந்தித்து எடுக்கவும். வேகம் என்பதை விட விவேகம் மிகவும் அவசியம் தேவை. மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தனவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. வழக்கு நிமிர்த்தமாக சில விரயங்கள் உண்டாகும்.
பணி/வேலை:
உத்தியோகப் பணிகளில் புதிய நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இடம் மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் பணியில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெண்கள் பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும்.
மனதளவில் இருந்து வந்த சோர்வு குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். ராகு கேது பெயர்ச்சியின் மூலம் இழுபறியான நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும். மற்றவர்களிடம் பேசும் போதும் பேச்சுகளில் கவனமும் கனிவும் தேவை. அரசியல்வாதிகள் கட்சி நிமித்தமான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று செயல்படவும். அடிக்கடி பயணம் மேற்கொள்வதினால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். தமக்கு ஆதரவாக செயல்பட்டவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்வீர்கள். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் இருக்கவும். செல்வ சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும்.
தொழில்/வியாபாரம்:
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு பணியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். வேலையாட்களால் ஏற்பட்ட தடை தாமதங்கள் குறையும். தொழில் நிமித்தமான பயணங்களில் மூலம் புதிய அனுபவம் உண்டாகும்.
அதேபோல், விவசாயம் சார்ந்த தொழில் செய்வோர், விவசாயிகளுக்கு லாபகரமான சூழல் உண்டாகும். வேலை ஆட்களை அனுசரித்து செல்லவும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். சந்தை நிலையை அறிந்து பயிர் விளைச்சலை மேற்கொள்வது லாபத்தை மேம்படுத்தும்.
உடல் ஆரோக்கியம்:
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
குடும்ப வாழ்க்கை:
சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் காலதாமதத்திற்கு பின்பு நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் விழிப்புணர்வு வேண்டும். குழந்தைகள் வழியில் இருந்து வந்த மனவருத்தம் மற்றும் கவலைகள் குறையும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லவும். சிலருக்கு உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும்.
மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு விதமான தயக்க உணர்வுகள் குறையும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர இழுப்பறியான சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…