Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,917.03
253.31sensex(0.34%)
நிஃப்டி22,466.10
62.25sensex(0.28%)
USD
81.57
Exclusive

2022 சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

Nandhinipriya Ganeshan April 13, 2022 & 11:08 [IST]
2022 சுபகிருது தமிழ்ப்புத்தாண்டு ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!Representative Image.

2022 சுபகிருது ராசி பலன்: அற்புதமான தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கிறது. ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் ஒரு பெயர் உண்டு. உதாரணமாக, சென்ற ஆ ண்டிற்கு "பிளவு ஆண்டு" என்று அழைக்கப்பட்டது, அதுபோல இந்த ஆண்டிற்கு "சுபகிருது ஆண்டு" (Subakiruthu Varudam Meaning in Tamil) என்று சொல்லப்படுகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வதாக வரும் ஒரு அற்புதமான ஆண்டாகும். இந்த சுபங்கள் நிறைந்த புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன மாதிரியான நன்மைகள் நடக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் (Tamil New Year Rasi Palan 2022 in Tamil) என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மேஷம்:

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு, கேது பகவான் தன ஸ்தானத்திலே சுமார் ஒன்றரை ஆண்டுகளாக குடியிருந்தார்கள். குடும்ப ஸ்தானத்திலே இருந்த ராகு பகவான் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தான் தன்னுடைய ராசிக்கு வந்திருக்கிறார். இரண்டாவது ஸ்தானத்திலே இருந்த ராகு பகவான் உங்களுடைய வாக்கினால் உங்க வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உருவாக்கினார். தற்போது உங்க பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு தரும் விதமாக ஏப்ரல் 14, 2022 ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த சுபகிருது வருடம் என்று சொல்லும்போதே நிறைய சுப செய்திகளை மேஷ ராசிகாரர்களுக்கு வாரி வழங்கவிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம்... மேலும்

ரிஷபம்:

இந்த சுபகிருது வருடம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு அற்புதமான வருடமாக இருக்கப்போகிறது, பலவிதமான அதிர்ஷ்டங்கள், யோகங்களை எல்லாம் அள்ளித் தரக்கூடிய ஒரு ஆண்டாக இருக்கப்போகிறது. ஏனென்றால், குரு பகவான் 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் இருக்கிறார், அதேப்போல் சனி பகவானும் 9 ஆம் இடமான லாப சனியாக இருக்கிறார். எனவே, இந்த காலக்கட்டங்களில் நீங்க செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பல விதமான லாபங்கள் மற்றும் ஆதாயங்களை இந்த அற்புத சுபகிருது வருடத்தில்... மேலும்

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சுபகிருது வருடத்தில் (Subakiruthu Varudam Meaning in Tamil) 10 ஆம் இடத்தில் அதாவது ஜீவன ஸ்தானத்தில் குருபகவான் வழுபெறுவதால் உங்களுடைய வியாபாரம் மற்றும் தொழிலில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். இதனால், சின்ன சின்ன இடையூறுகள், தடங்கள் ஏற்பட்டாலும் தொழிலில் எந்த விதமான பாதிப்பும் இருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தொழிலில் முன்னேற்றம், லாபம் என்பதே இல்லாமல் அவதிப்பட்டு வந்திருப்பீங்க. ஆனால், இந்த தமிழ் வருட பிறப்பால் உங்களுடைய தொழிலில் நீங்க எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான லாபம் கிடைக்கும். அதேபோல் வேலைக்குச் செல்லும் மிதுன ராசிகாரர்களுக்கு சில வேலை மாற்றங்கள்... மேலும்

கடகம்:

இந்த சுபகிருது வருடத்தில் 9 ஆம் இடத்தில் குருபகவான் இருப்பது என்பது ஒரு பாக்கியம் என்றும் சொல்லுவார்கள். ஏனெனில் யோகத்தையும், அதிர்ஷ்டத்தியும் அள்ளிக் கொடுக்கக் கூடிய இடமாக கருதப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்ப்பார்க்கலாம். கடக ராசியில் பூசம், ஆயில்யம், புனர்பூசம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிரங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராகு... மேலும் 

சிம்மம்:

இந்த அற்புதங்கள் நிறைந்த சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்ய இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கிரக ராசிகளுக்கும் பலவிதமான நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியை வழங்கி, அவர்களை சோதிக்கும் கிரமான சனி பகவான் மகரம், கும்பம் ராசியிலும் பயணம் செய்ய இருக்கிறார். அதேப்போல், ராகுபகவான் மேஷ ராசியிலும், கேதபகவான் துலாம் ராசியிலும் பயணம் செய்ய உள்ளார்கள். சிம்ம ராசி மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு... மேலும்

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே! இந்த வருடத்தை பொறுத்தவரை உங்களுக்கு ஒரு மிகச்சிறப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. ஏனெனில் குருபகவான் ஏழாம் இடமான கலஷ்த்தர ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் இதுவரை உங்களைவிட்டு பிரிந்து போன அனைத்தும் உங்களை தேடிவரக் கூடிய காலம். உதாரணமாக, குடும்பப் பிரச்சனையால் பிரிந்து வாழும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து மீண்டும் இணைவார்கள். அதுமட்டுமல்லாமல், சனிபகவான் ஐந்தாம் இடமான பூரியபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால்... மேலும்

துலாம்:

சனிபகவான் மகரம் மற்றும் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றார். ராகுபகவான் மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் பயணம் செய்யவிருக்கிறார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16 ஆம் தேதி ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கின்றார். ஆனி 28 ஆம் தேதி (ஜூலை 27) செவ்வாய்க்கிழமை வக்ரகதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகின்றார். அதுமட்டுமல்லாமல், குருபகவான் 6 ஆம் இடமான ரோகருன சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால், பூர்வீக சொத்துக்கள் சொத்துக்கள் உங்களை வந்தடைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. உங்களுடைய கடன் சுமை படிப்படியாக... மேலும்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே! குருபகவான் உங்க ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வீக புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால், நீண்ட காலமாக தடைபட்டு வந்த எல்லாக் காரியங்களும் மிகச் சிறப்பாக கைக்கூடும். இதுவரை வேண்டாவெறுப்பாக செய்துக் கொண்டு வந்த வேலையாக இருக்கட்டும், தொழிலாக இருக்கட்டும், வியாபாரமாக இருக்கட்டும், அவை எல்லாவற்றையும் இந்த சுபகிருது வருடத்தில் ஒரு புதிய உற்சாகத்துடன் முழு ஈடுபாடுடன் செய்ய ஆரம்பிப்பீர்கள். பல புதிய அசையா சொத்துக்கள் வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ஆன்லைன் மூலம் தொழில் செய்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் ... மேலும்

தனுசு:

சுபகிருது வருடத்தில் குருபகவான் உங்களுடைய ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். இவரை அர்த்தாஷ்டம குரு என்றும் சொல்வார்கள், இதனால் பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பொருளாதார வரவுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. உங்களுடைய பழைய கடங்களை எல்லாம் அடைப்பீர்கள். அதுமட்டுமல்லாமல், இந்த காலக்கட்டத்தில் புதிய கட்டிடங்கள் கட்டவும் தொடங்குவீங்க. பழைய வாகனத்தை விற்று புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் யோகங்கள் இருக்கிறது. அதேபோல், சனிபகவான் இரண்டாம் இடத்தில் இருக்கிறார், ஏழரை சனி நடந்துக் கொண்டிருக்கிறது. இதை பாத சனி என்றும் சொல்லுவார்கள் இதனால் பாரம்பரிய சொத்துக்களை எல்லாம் திரும்பி வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும். நீண்ட காலமாக வராமல் இருந்த பணமெல்லாம் வந்து சேரும். அதேபோல் தொழிலை மாற்றியமைத்தற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. பெண் தனுசு ராசிக்காரர்கள்... மேலும்

மகரம்:

இந்த அற்புதமான சுபகிருது வருடத்தில் இதுவரை இருந்து வந்த திருமண தடைகள், காரிய தடைகள் அகன்று, திருமணம் தாமதமானவர்களுக்கு சொந்தத்திலேயே திருமணம் நடைபெறுவதற்கான யோகங்கள் உருவாகும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும் மகர ராசிகாரர்களுக்கு விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடுவீர்கள்; சிலர் வெளிநாடு சென்று தங்கம் பதக்கம் வெல்லுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம், திருமணத்தடை எல்லாம் அகலும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாத மகர ராசிக்காரர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். கல்வியில் இருந்து தடைகள் விலகி, மாணவ மாணவிகள்... மேலும்

கும்பம்:

இந்த சுப நாளில் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசியில் பயணிக்க இருக்கிறார். ஏப்ரல் 29 ஆம் தேதி சித்திரை 16 வெள்ளிக்கிழமை அன்று சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28 ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் மகர ராசிக்கு திரும்புவார். இதனால் கும்ப ராசி காரர்களுக்கு இந்த ஆண்டு நன்மை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையும். பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையில் அற்புதம் நிகழும். தம்பதியர்களுக்கு இடையில் கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான நேரம் கூடி வரும் காலம் இது. அது மட்டுமில்லாமல் இதுவரை உங்கள்... மேலும்

மீனம்:

குருபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த சுபகிருது ஆண்டானது தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை வாரி வழங்குகிறது என்று கூறலாம். உங்களுக்கு இந்த ஆண்டில் சுப செலவுகள் தேடி வரப்போகிறது. அந்த அளவிற்கு சுபத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஜென்ம ராசியில் குருபகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இதனால், நல்ல சந்தோஷமான செய்திகள் தேடி வரப்போகிறது. பொன்னான காலம் வரப்போகிறது. சோமவார விரதம் மேற்கொண்டால் தீராத நோய்களும் குணமடையும். குலதெய்வத்தை விடாமல் வழிபடுங்கள். சங்கரன் கோவிலில் உள்ள... மேலும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்