Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளைய ராசிபலன் - வெள்ளி | Tomorrow Rasi Palan in Tamil | 23.06.2023

Gowthami Subramani Updated:
நாளைய ராசிபலன் - வெள்ளி | Tomorrow Rasi Palan in Tamil | 23.06.2023Representative Image.

மங்களகரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 08 ஆம் நாளுக்கான [23 ஜூன் 2023, திங்கள்] மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

நல்ல நேரம்

காலை: 09.30 மணி முதல் 10.30 மணி வரை

மாலை: 01.30 மணி முதல் 02.30 மணி வரை

மேஷம் | Nalaya Rasi Palan Mesham

மனதில் தோன்றும் புதுவிதமான இலக்குகளை நிறைவேற்ற செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பானவற்றில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழி அனுசரித்துச் செல்வது உச்சிதம். கடன் செலுத்துவதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். நண்பர்களின் வழி ஆதாயம் உண்டாகும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் | Nalaya Rasi Palan Rishabam

உறவினர்கள் வழி ஆதாயம் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குதல் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு சார்ந்த செயல்களில் அனுகொலம் உண்டாகும். உங்களின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உற்சாகம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் | Nalaya Rasi Palan Midhunam

தடைபட்ட காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும். புதிய முயற்சிகளுக்கு வித்தியாசமான முறையில் செயல்பட்டு தீர்வு காண்பீர்கள். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். மறதி சார்ந்து இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

கடகம் | Nalaya Rasi Palan Kadagam

சில செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை பலப்படுத்தும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்பு அதிகம். தனவரவுகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகலாம். வங்கி சார்ந்த துறைகளில் பொறுப்புகள் அதிகமாகலாம். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த அனுபவங்கள் கிடைக்கும். சாதனை!

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

சிம்மம் | Nalaya Rasi Palan Simmam

புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகலாம். உடன் பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்வது சிறப்பு. மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கஷ்டமான விஷயங்களையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி | Nalaya Rasi Palan Kanni

உத்தியோகம் சார்ந்தவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகி, சாதகமான சூழல் உண்டாகும். உலகியல் வாழ்க்கை தொடர்பானவற்றில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் விலகி விடும். உணவு தொடர்பான துறைகளில் உங்களது தனித்திறமைகள் வெளிப்படும். மறைமுக விஷயங்களை புரிந்து செயல்படுவது வெற்றியைத் தரும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

துலாம் | Nalaya Rasi Palan Thulam

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, காரியங்களை விரைவில் செய்து முடிப்பீர்கள். துறை சார்ந்த சில நுட்பங்களை எளிமையாகக் கையாள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி பெருகும். விவசாயம் சார்ந்த பணிகளில் உங்களின் சிந்தனை மேலோங்கும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் | Nalaya Rasi Palan Viruchigam

நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகலாம். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்படும் புதுவிதமான மாற்றங்களால் லாபம் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். கடந்த கால நினைவுகள் தோன்றலாம். தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு | Nalaya Rasi Palan Dhanusu

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிவுக்கு வரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மனதில் உண்டாகும் தைரியத்தால், தெளிவு உண்டாகும். எதிலும் விவேகமாக செயல்படுவது உங்கள் மதிப்பை மேம்படுத்தும். மனதில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் | Nalaya Rasi Palan Magaram

அரசு சார்ந்த பணிகளைப் பொறுமையாகக் கையாள்வது நல்லது. விவேகத்துடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்கள் நன்மையைத் தரும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். எதிலும் தைரியமாகச் செயல்படுவது உச்சிதம். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் தீரும். சலனம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கும்பம் | Nalaya Rasi Palan Kumbam

அதிர்ஷ்கரமான சில வாய்ப்புகள் உண்டாகும் நாள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே பிரச்சனைகள் விலகி நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகலாம். குழந்தைகளின் வழி நன்மை உண்டாகும். நிறைவு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் | Nalaya Rasi Palan Meenam

இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் விலகி பொருளாதார வரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பாக இருந்த இன்னல்கள் குறையும். உறவினர்களின் வழி அனுகூலம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையாக இருப்பது சிறப்பைத் தரும். பணி தொடர்பான செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். இது நன்மையைத் தரும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: இளம் நீலம்

அதிர்ஷ்ட எண்: 6


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்