Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இறந்தவர்களின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்? | Pitru Photo Direction in Home

Nandhinipriya Ganeshan Updated:
இறந்தவர்களின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்? | Pitru Photo Direction in HomeRepresentative Image.

நம்மில் பலருக்கும் இறந்து போனவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அதேபோல், எந்த இடத்தில் வைத்தால் நல்லது என்ற குழப்பமும் இருக்கும். அவற்றிற்கு அனைத்திற்கும் தான் இப்போது விரிவான விளக்கத்தை பார்க்கப்போகிறோம். பொதுவாக, நிறைய பேர் இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், அது தவறு. நம்மில் ஒருவராக வாழ்ந்து விண்ணுலகம் சென்றவர்களை கடவுளுக்கு இணையானவர்களாக கருதப்படுவார்கள். இதனால், அவர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது குடும்பத்திற்கு பல நன்மைகளை தரவல்லது. எனவே, இறந்தவர்களின் படங்களை வீட்டில் தாராளமாக வைத்து வழிபடலாம்.

இருப்பினும், அவர்களின் புகைப்படங்களை மாட்டும் இடம் மற்றும் திசை என்று சம்பிரதாயம் ஒன்று உண்டு. அதாவது, சிலர் கடவுள் படங்களை வைத்திருக்கும் பூஜை அறையிலேயே இறந்தவர்களின் புகைப்படங்களையும் வைத்து வழிபாடு செய்வார்கள். அது வீட்டிற்கு நல்லதல்ல. என்னதான் இறந்தவர்களை கடவுளாக நினைத்து அவர்களை வழிபாடு செய்தாலும் கூட அவர்களும் மனிதர்கள் தான். வாழும்போது பாவங்கள் செய்திருப்பார்கள். எனவே, கடவுள் படத்திற்கு இணையாக இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜையறையில் வைப்பது முற்றிலும் தவறு. ஒருவேளை அப்படி வைத்து வழிபட்டு வந்திருந்தால், உடனே  அங்கிருந்து எடுத்து வேறு இடங்களில் வைத்து வழிபடவும்.

எப்படி பூஜை அறையில் வைக்கக்கூடாதோ, அதேப்போல் படுக்கை அறையிலும் இறந்தவர்களின் புகைப்படங்களை மாட்டி வைக்கக்கூடாது. இந்த இரண்டு இடங்களை தவிர்த்து பிற இடங்களில் வைத்து வழிபடுவது பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும், இறந்து போனவர்களின் பார்வை தெற்கு திசையை பார்த்தவாறு படத்தை மாட்டி வைக்க வேண்டும். அதேபோல், வீட்டின் வடக்கு, தென்மேற்கு மூலையில் இறந்தவர்களின் படத்தை வைக்கவே கூடாது. இதனால், குடும்பத்தில் தொடர் பிரச்சனை எழுந்த வண்ணம் இருக்கும். அமைதி என்பதே இல்லாமல் போய்விடும். குறிப்பாக, கணவன் - மனைவி சண்டை, விவாகரத்து வரைக்கும் கூட போகலாம்.

முன்னோர்களை வழிபாடு செய்வதில் நாம் செய்யும் மற்றொரு தவறு, பூஜை அறை விளக்குகளை அவர்களுக்கு ஏற்றுவது. ஆம், எப்போதுமே பூஜை அறை விளக்குகளை அவர்களுக்கு பயன்படுத்த கூடாது. அவர்களை வழிபாடு செய்வதற்கென்று தனிவிளக்கு தான் வாங்கி பயன்படுத்த வேண்டும் அதேபோல், நல்லெண்ணெய், நெய் என எதுவேண்டுமானலும் ஊற்றி விளக்கேற்றலாம். இதில் விதிவிலக்கு கிடையாது. அனைத்து எண்ணெய் கலந்து ஊற்றி கூட விளக்கு ஏற்றலாம். பூஜைக்கு ஊற்றும் எண்ணெய்யும் கூட பயன்படுத்தலாம். விளக்கு தான் தனிவிளக்கு. அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி விளக்கு போன்ற எந்த விளக்கையும் வாங்கி உபயோகிக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்