Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எந்தெந்த மாதங்கள் திருமணம் செய்ய உகந்தவை..! | Marriage Months In Tamil 2023

Gowthami Subramani Updated:
எந்தெந்த மாதங்கள் திருமணம் செய்ய உகந்தவை..! | Marriage Months In Tamil 2023Representative Image.

எந்தவொரு நல்ல காரியங்கள் செய்யும் போதும், நேரம், காலம் என அனைத்தையும் பார்த்து செய்வது வழக்கம். வீடு கட்டுதல், திருமணம் நடைபெறுதல் போன்ற வீட்டில் நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷேசத்திற்கும் நல்ல நாள் பார்த்து பின் முடிவுகளை எடுப்பர். அதிலும், திருமணம் என்பது இரு பந்தங்கள் ஒன்றிணைவது ஆகும். அதிலும் திருமணம் செய்ய முடிவுகளை எடுப்பதற்கு, ஜோதிடர்களைப் பார்த்து பின் முடிவுகளை எடுப்பார்கள். நல்ல நாள், கிழமை, மாதம், நேரம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பார்த்த பிறகே திருமணம் செய்வார்கள். இதில், எந்த நாள், கிழமை மாதம் திருமணம் செய்வதற்கு உகந்தவை என்பதைக் காணலாம்.

எந்தெந்த மாதங்கள் திருமணம் செய்ய உகந்தவை..! | Marriage Months In Tamil 2023Representative Image

திருமணம் செய்ய உகந்த மாதங்கள்

முதலில் திருமணம் செய்வதற்கு முதலில் இருவரது பொருத்தம் பார்க்க வேண்டும். பிறகு, அவர்களுக்கான ராசியான மாதத்தை வைத்து, திருமணத் தேதியை கணிப்பர். பொதுவாக, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது. ஆனால், எல்லா மாதங்களும் திருமணம் செய்ய உகந்த மாதங்கள் என்று கூற முடியாது.

அந்த வகையில், திருமணம் செய்ய உகந்த மாதங்களாக, சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி மற்றும் பங்குனி போன்ற மாதங்களில் திருமணம் வைத்துக் கொள்ளலாம்.

இதனைத் தவிர்த்து, திருமணம் செய்வதற்கு உகந்த திதி, நாள் மற்றும் நட்சத்திரம் உள்ளிட்டவற்றையும் பார்த்து வைப்பர்.

திருமணம் செய்வதற்கு உகந்த நாள்

முதலில் மாதங்களைத் தேர்ந்தெடுத்து, பிறகு எந்த நாள் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்பதை முடிவு செய்வர். அதன் படி, சுபமுகூர்த்த தினங்களையே திருமணம் செய்வதற்குத் தேர்ந்தெடுப்பர். இருப்பினும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சுப முகூர்த்த தினமாகவே இருந்தாலும், அந்த தினங்களில் முகூர்த்தம் வைக்க மாட்டார்கள். இந்த இரு நாள்கள் தவிர்த்து மற்ற அனைத்து நாள்களும் திருமணம் செய்ய உகந்த நாள்களாகும்.

எந்தெந்த மாதங்கள் திருமணம் செய்ய உகந்தவை..! | Marriage Months In Tamil 2023Representative Image

திருமணம் செய்வதற்கு உகந்த திதி

திருமணத்திற்கான நாள் தேர்ந்தெடுத்தப் பின், திதி பார்ப்பது அவசியம் ஆகும். பொதுவாகவே, அஷ்டமி, நவமி கால கட்டங்களில் சுபகாரியங்களைச் செய்ய மாட்டார்கள். ஆனால், வளர்பிறை, பஞ்சமி, சப்தமி, ஏகாதமி, தேய்பிறை, திரயோதசி, துவிதியை போன்ற திதிகள் திருமணம் நடத்த உகந்ததாக அமைகிறது.

திருமணம் செய்வதற்கு உகந்த நட்சத்திரம்

திருமண நாள் குறித்த பிறகு, அந்த தினத்தில் வரக்கூடிய நட்சத்திரத்தையும், திருமணம் செய்யும் மணமகன் மற்றும் மணமகளுக்கான நட்சத்திரத்தையும் சரிபார்த்து பொருத்தம் உள்ளதா என்பதைக் கணிப்பர்.

ஆனி மாதத்தில் திருமணம் செய்யலாமா.?

ஆனி மாதமானது திருமணம் செய்வதற்கு உகந்த மாதமாகவே கருதப்படுகிறது. இருப்பினும், ஆனி மாதத்தில் பிறந்த பெண்ணுக்கும் மற்றும் ஆனி மாதத்தில் பிறந்த ஆணுக்கும் திருமணம் செய்தல் கூடாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்