Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த மாதம் சந்தைக்கு வரவிருக்கும் இருசக்கர வாகனங்கள்...பைக் பிரியர்களுக்கு ஃபுல் ட்ரீட் தான்..!

madhankumar August 04, 2022 & 16:54 [IST]
இந்த மாதம் சந்தைக்கு வரவிருக்கும் இருசக்கர வாகனங்கள்...பைக் பிரியர்களுக்கு ஃபுல் ட்ரீட் தான்..!Representative Image.

நீங்கள் இருசக்கர வாகன பிரியரா அப்போ இந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் அறிமுகமாகவுள்ளன. அதுபோக சில புதிய பைக்குகள் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகவுள்ள.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350:

ராயல் என்ஃபீல்டின் ஹண்டர் ரக வண்டிகள், இதுவரை வந்த ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் மிகக்குறைவான விலையில் விற்பனைக்கு வர உள்ளன. அதேபோல இதுவரை வந்த பைக்குகளில் மிக குறைந்த எடையுடன், கூடுதல் கம்ஃபர்டபுளாக இருக்குமென சொல்லப்பட்டுள்ளது. இந்த பைக்கில் வேலைபாடுகள் நிறைந்த பெட்ரோல் டேங்க், அகலமான கைப்பிடி, வட்ட வடிவில் கண்ணாடிகள், ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் அலகுகள், ரிப்பட் வடிவிலான பின்பக்க ஒற்றை இருக்கை, வட்டமான ஃபெண்டர்கள் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செமி டிஜிட்டல் எனப்படும் பாதி டிஜிட்டல் வடிவிலான இன்ஸ்ட்ருமென்ட்டர் கிளஸ்டர் இதில் இருக்கும். மேலும் இதில் வயரிங் அல்லது அலாய் மூலம் சக்கரங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் ஃபிரென்ட் பக்க டிஸ்க் பிரேக் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெளிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் என் 150:

கடந்த ஜூன் மாதம் பஜாஜ் பல்சர் என் 160 அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாதம் பஜாஜ் பல்சர் என் 150 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தற்போது அறிமுகமாகவிருக்கும் 150 வேரியண்ட் 160 மாடலை போன்றுதான் இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு சில உதிரி பாக்கங்கள் மட்டுமே சற்று நாட்டப்படும் என கூறப்படுகிறது மற்றவை அனைத்தும் 160 வேரியண்டில் இருந்தாற்போல்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்ப்ளஸ் (Hero X pluse 200T 4V):

Hero xPulse 200 ரக பைக்குகள், பலராலும் கொண்டாடப்பட்ட ஒன்றாகும். அதற்குப் பின் வெளியான Hero xPulse 200 T அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை . இந்த நிலையை Hero XPulse 200 T 4V மாற்றும் என இதன் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ரெட்ரோ லுக்கில், 4 வால்வ் என்ஜினில் அட்வென்சர் பைக் போல இது தயாராவதாக தெரிகிறது. 

இதனுடன் கூடுதல் அறிவிப்பாக ஹோண்டா நிறுவனமும் ஹண்டர் ரக பைக்குகளை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அது இந்த மாதம் சந்தைக்கு வரவில்லை என்றாலும் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பைகிக்கிற்கு தற்போது 'Formidable' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் 300 மற்றும் 500 சிசி உடன் CB350 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் என தெரிகிறது. மேலும் ஆகஸ்ட் 8 முதல் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல TVS நிறுவனம், தனது iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (TVS iQube ST) பற்றிய முக்கிய அறிவிப்புகளை இந்த மாதம் வெளியிடும் என தெரிகிறது. ST ரகத்தில் தயாரிக்கப்படும் இந்த பைக், வேகமாக சார்ஜ் செய்ய உதவும் வகையில், பெரிய பேட்டரி கொண்டு தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. Zontes - Moto Marini ஆகிய நிறுவனங்க ளும் இந்தியாவில் தங்கள் வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுபற்றிய அறிவிப்புகள் இம்மாதத்தில் வெளியகலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்