Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரே ஒரு இந்திய டிரைவிங் லைசன்ஸ்….! 21 நாடுகளுக்கு பயணம்…

Gowthami Subramani July 27, 2022 & 15:25 [IST]
ஒரே ஒரு இந்திய டிரைவிங் லைசன்ஸ்….! 21 நாடுகளுக்கு பயணம்…Representative Image.

தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் வண்டி வைத்திருக்கின்றனர். அந்த வகையில், வண்டிகள் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் எடுக்கப்படும் டிரைவிங் லைசென்ஸ் இந்தியாவில் மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும் என நினைக்கிறீர்களா..?

இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸைப் பயன்படுத்தி, 21 நாடுகளுக்குச் செல்ல முடியும் எனக் கூறுகின்றனர். இது உண்மையா என்ற சந்தேகமும் ஒரு சிலருக்கு எழுகிறது. இருந்தபோதிலும், ஒரு சில நாடுகளில் டிரைவிங் லைசென்ஸ் அனுமதிக்கப்படாது. ஆனால், குறிப்பிட்ட 21 நாடுகளில் ஒரு சில கட்டாயத்துடன் இந்த உரிமையை அளித்துள்ளது.

இதில், அந்த 21 நாடுகளும், அந்த நாடுகளில் எத்தனை காலத்திற்கு இந்திய லைசன்ஸை உபயோகப்படுத்தலாம் என்பதை இதில் காணலாம்.

பிரிட்டன் - ஒரு வருடத்திற்கான உரிமம்

நியூசிலாந்து - ஒரு வருடத்திற்கான உரிமம்

ஜெர்மனி - ஆறு மாத காலத்திற்கான உரிமம்

ஆஸ்திரேலியா - மூன்று மாதங்கள்

ஸ்வீடன் - ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு அல்லது நார்வேஜியன் போன்ற மொழிகளில் இருக்க வேண்டும்.

சுவிட்சர்லாந்து - ஒரு வருடம்

சிங்கப்பூர் - ஓராண்டு நாடு முழுவதும் வண்டி ஓட்டலாம்

தென்னாப்பிரிக்கா - இந்திய டிரைவிங் லைசன்ஸ் மூலம்       தென்னாப்பிரிக்காவின் அழகான நகரங்கள் மற்றும் கிராமங்களை சுற்றிப் பார்க்கலாம்.

மலேசியா - மலேசியா நாட்டில் வண்டி ஓட்ட ஓட்டுநர் உரிமம் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இருக்க வேண்டும். இந்த ஆவணம், மலேசியா நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் சரிபார்க்கப்படும்.

ஹாங்காங் - ஒரு வருடத்திற்கு சட்டப்பூர்வமாக காரை ஓட்டலாம்.

பிரான்ஸ் - ஒரு வருடத்திற்கு அனுமதி வழங்குகிறது

அமெரிக்கா - ஒரு வருடத்திற்கு அனுமதி

பூட்டான் - 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்ட அனுமதி.

ஸ்பெயின் - ஸ்பெயின் நாட்டினைச் சுற்றி பார்க்க, அந்த நாட்டில் காரை வாடகைக்கு எடுத்து, இந்திய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி ஓட்டலாம் 

மொரிஷியஸ் - இந்த தீவை சுற்றிப் பார்க்க போதுமான நேரம் இருக்கும். இதனால், வாகனம் ஓட்டுவதற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி உண்டு 

பின்லாந்து - ஒரு வருடத்திற்கான ஓட்டுநர் உரிமம் 

அயர்லாந்து - EEA நாடுகள் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கு அனுமதி உண்டு

இத்தாலி - இந்த நாட்டில் சர்வதே ஓட்டுநர் அனுமதியுடன் இந்திய ஓட்டுநர் உரிமத்தை வைத்து வண்டி ஓட்டலாம்.

நார்வே - இது வடக்கு விளக்குகளின் நிலம் எனக் கூறப்படுகிறது. மூன்று மாதங்கள் வரை அனுமதி உண்டு

ஐஸ்லாந்து - கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிகளில் வழங்கப்படக் கூடிய உரிமத்துடன் ஐஸ்லாந்தில் வாடகை வாகனங்களின் பயணிக்க முடியும். இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்.

கனடா - இந்திய லைசென்ஸ் உரிமம் கனடாவில் செல்லுபடியாகும்.

இந்த விதிமுறைகளின் படியே இந்தியாவில் பெறப்படும் ஓட்டுநர் உரிமத்தை வைத்து மேலே கூறப்பட்ட 21 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்