Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bajaj-Triumph 400cc பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா? | Bajaj-Triump 400cc Bike Launch in India

Priyanka Hochumin Updated:
Bajaj-Triumph 400cc பைக் இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா? | Bajaj-Triump 400cc Bike Launch in IndiaRepresentative Image.

டிரையம்ப் வரும் ஜூலை 5 ஆம் தேதி புதிய மோட்டார் பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. அது முற்றிலும் புதிய 400சிசி பஜாஜ் உருவாக்கிய பைக்காகத் தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் விலை பற்றிய அனைத்து விவரமும் ஜூலை 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj-Triumph 400cc பைக் விவரங்கள்

இந்த புதிய சிங்கிள் சிலிண்டர் பைக்கின் அறிமுகம் ராயல் என்ஃபீல்டிற்கு மிகப்பெரிய போட்டியாக அமையும். வெளிவந்த தகவலின் படி, பைக் ஒரு நியோ-ரெட்ரோ வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய கெப்பாசிட்டி மற்றும் லிக்விட் கூலிங் இருப்பதால் இந்த பைக்கின் என்ஜின் ராயல் என்ஃபீல்டின் 350சிசி ஜே-பிளாட்ஃபார்ம் எஞ்சினை விட கணிசமாக மேம்பட்டதாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். இந்த புது மாடல் பைக் வெற்றி பெறுமா என்பது அதனின் விலையை வைத்து தான் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், கடந்த சில வருடங்கால மார்க்கெட்டில் பெரிய அளவு முன்னேற்றத்தை காணாத பஜாஜ் இந்த மாடல் பைக்கிற்கு நியாயமான விலையை நிர்ணயித்து சந்தையில் முதலாவதாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்