Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

டீசல் வாகனங்களுக்கு தடையா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு! | Diesel Vehicles Ban in India

Nandhinipriya Ganeshan Updated:
டீசல் வாகனங்களுக்கு தடையா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு! | Diesel Vehicles Ban in IndiaRepresentative Image.

காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவதற்காக பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் கையில் எடுத்த ஒரே ஆயுதம் எலக்ட்ரிக் வாகனங்கள். அந்த வகையில், எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும், விற்பனை சமஅளவு இருந்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாடு அதிகரித்திருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை உபயோகிப்பவர்களும் ஏராளம். 

இதற்கிடையில், எரிசக்தி மாற்றத்திற்கான குழு கடந்த பிப்ரவரி மாதம் 2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் மூலம் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், 3 மற்றும் 4 சக்கர வாகனங்களை தடை செய்வது மின்சாரம் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. தற்போது இந்த டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்த விவாதம் தீயாய் பரவி வருகிறது. 

இந்த நிலையில், இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த குழுவின் பரிந்துரையின் நிலைப்பாட்டை ட்வீட் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதில், "எரிசக்தி மாற்றம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமைச்சகம் பெற்றுள்ளது. 

இருப்பினும், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசு இன்னும் ஏற்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்