Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கியா நிறுவனத்தின் புது மாடல்.. இந்த காருல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. விலை எவ்வளவு? | Kia Seltos Facelift Price in India

Nandhinipriya Ganeshan Updated:
கியா நிறுவனத்தின் புது மாடல்.. இந்த காருல இன்னொரு ஸ்பெஷலும் இருக்கு.. விலை எவ்வளவு? | Kia Seltos Facelift Price in IndiaRepresentative Image.

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, தங்களின் மிகவும் பிரபலமான எஸ்யூவியான கியா செல்டோஸின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு பிறகு இந்த கார் பற்றிய புதிய அப்டேட்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாத வாக்கில் செல்டோஸ் காரின் புதிய பதிப்பான 'கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்' மாடல் தென் கொரியாவில் நடந்த பூசன் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இது நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்த ஆண்டு ஜூலை மாதம் வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது கியா நிறுவனம். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சரி ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம். 

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் இன்ஜின்:

தற்போது இருக்கும் மாடலில் 140 ஹெச்பி பவர், 242 Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய மாடலில் 160 ஹெச்பி பவர், 253 Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு:

வடிவமைப்பு திருத்தங்களைப் பொறுத்தவரை, செல்டோஸ் மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், முன்புற ஹெட்லேம்ப்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைனை எதிர்பார்க்கலாம். காரின் பின்புறம் டெயில் லேம்ப் மற்றும் எல்இடி லைட் பார் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் மத்தியில் கியா பேட்ஜ் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

அம்சங்கள்:

உட்புறத்தில், செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் டேஷ்போர்டில் ஒரு புதிய ட்வின் டிஸ்ப்ளே உள்ளது, இதில் இரண்டு திரைகள் உள்ளன. ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டுக்கும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கும். மேலும், நேவிகேஷன் அடிப்படையிலான ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல், நெடுஞ்சாலை ஓட்டுநர் உதவி, சரவுண்ட் வியூ மானிட்டர், தானியங்கி உயர் பீம்கள் மற்றும் ரிமோட் ஸ்மார்ட் பார்க்கிங் உதவி ஆகியவற்றைப் பெறும்.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, ஆறு ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார்ஸ், கேமரா மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் புதுப்பிக்கப்பட்ட செல்டோஸ் மாடலில் பனோரமிக் சன்ரூஃப் வசதி இடம்பெறும். இதன் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்