Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் களமிறங்க உள்ள ஹோண்டாவின் இந்த வாகனங்கள்..! அப்படி என்ன ஸ்பெஷல் இதுல.. | Honda Files Patent

Gowthami Subramani Updated:
இந்தியாவில் களமிறங்க உள்ள ஹோண்டாவின் இந்த வாகனங்கள்..! அப்படி என்ன ஸ்பெஷல் இதுல.. | Honda Files PatentRepresentative Image.

வாகன உற்பத்தி நிறுவனங்களுள் பிரபல நிறுவனமாக விளங்கும் ஹோண்டா நிறுவனம், இரண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு பேட்டன்ட் உரிமத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

தற்சமயம், மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தியும், மக்களுக்கு அதன் மீதான ஆர்வமும் அதிகரித்தே வருகிறது. இதனால், பல்வேறு முகம் தெரியாத புது முக நிறுவனங்கள் களமிறங்கி இந்தியாவின் மின்சார இருசக்கர வாகனங்களைக் கறமிறக்குவதில் அதிக ஆர்வம் கொண்டு விளங்குகிறது. இது போல, சில வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவின் மின் வாகன சந்தையை நோக்கியே படையெடுத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பிரபல இருசக்கர வாகன உற்பத்தியாக விளங்கும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருசக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டன்ட் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னரே, இந்நிறுவன, பெட்ரோல் ஓடக்கூடிய இருசக்கரங்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டாவின் இந்த புதுவித எலக்ட்ரிக் வாகனங்கள், ஹோண்டா பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனமானது, முதலில் ஆக்டிவா அடிப்படையில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது இரு புதுமுக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பேட்டன்ட் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் டூவீலர்கள் டேக் இ மற்றும் ஜூமர் இ ஆகும். இவற்றையே பேடன்ட் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு ரகங்களுமே மொபட் ரக இ-வாகனங்கள் ஆகும். இவை இரண்டுமே வெவ்வேறு வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்