Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

Splendor மார்க்கெட்டை முடிக்க Honda புதிய மைலேஜ் பைக்கை கொண்டு வருது....!

Manoj Krishnamoorthi Updated:
Splendor மார்க்கெட்டை முடிக்க Honda புதிய மைலேஜ் பைக்கை கொண்டு வருது....!Representative Image.

Honda நிறுவனத்தின் பக்காவான இன்ஜின் பயன்பாடு, Honda வாகனங்களை தனித்துவமாக காட்டும். ஹோண்டா நிறுவனத்தின் அதிகமாக நாம் பார்க்கும் வண்டி என்றால் Activa ஆகும். இதன் பட்ஜெட் ஃபிரண்ட்லி பைக்கள் கொஞ்சம் கம்மியாக தான் உள்ளது. ஹோண்டா நிறுவனம் உருவாக்கியுள்ள 100cc பைக்கை பற்றிய அப்டேட் தான் பார்க்க போகிறோம். 

ஹோண்டா மற்றும் ஹீரோ இணைந்து தயாரித்த Hero Honda Splendor மிகவும் பிரபலமானது. இதன் விற்பனை 30 ஆண்டுகள் கடந்து இன்று வரை Splendor விற்பனையில் கொடிகட்டிக் கொண்டு இருக்கிறது. தற்போது விற்பனையாகும் Splendor பைக்கள் Hero நிறுவனத்தின் கீழ் விற்பனையாகிறது. அதேபோல Honda வின் Shine, SP 125, Unicorn பைக்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது வரை Splendor பைக்கின் செயல்பாடு தனித்துவமாக உள்ளது. இந்த Splendor பைக்கிற்கு மாற்று என எந்த பைக்கும் மார்க்கெட்டில் நிலைக்கவில்லை. அதுவும் Honda CT100 விலை குறைந்தும் நல்ல பர்ஃபாமன்ஸ் இருந்தும் Splendor தான்  ராஜாவாக உள்ளது. 

2021 இல் அளித்த பேட்டியில் ஹோண்டா நிறுவனம் புதிய  100cc பைக்கை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக கூறி இருந்தது. அதேபோல 2023 மார்ச் மாதம் களமிறங்க உள்ள புதிய 100cc பைக்  Splendorக்கு தான் போட்டி என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதியதாக உருவாகியுள்ள 100cc பைக் சுமார் 8.7 PS பவர் மற்றும் 9.3 Nm டார்க்கை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதிக மைலேஜ் அளிக்கும் பைக்காக உருவாகி உள்ள இந்த புதிய வெளியீடு குறைந்த விலையில் தான் கிடைக்குமாம். இதன் லான்ச் பிறகு தான்  Splendor விற்பனையில் மாற்றம் ஏற்படுமா.... என்பதைப் பற்றி தெளிவாக கூற முடியும். மேலும் இந்த பைக் கிளாசிக் ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் என கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்