Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Automobile Tips: உங்கள் கார் மழையில் நனைந்தால் என்ன நடக்கும்? தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

madhankumar May 25, 2022 & 13:36 [IST]
Automobile Tips: உங்கள் கார் மழையில் நனைந்தால் என்ன நடக்கும்? தெரிஞ்சு வச்சுக்கோங்க..!Representative Image.

நீங்கள் காரை ஓட்டி செல்லும்போதோ அல்லது நிறுத்தி வைத்திருக்கும்போது கார் மழையில் நனைந்தால் சுத்தமாகும் என நினைத்துக்கொண்டிருப்பீர்கள். அனால் உண்மையில் என்ன நடக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

நம்மில் பலர் காரை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவம் ஆனால் அந்த கவனம் காரை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதில் இருக்காது. காரை சுத்தமாக வைத்திருப்பது என்பது மிக முக்கியமாகும், ஆனால் நாம் சோம்பேறித்தனத்தை காரணமாகவே அல்லது வேறு வேலை மீது உள்ள கவனத்தில் அதனை செய்வது இல்லை. அப்படி இருக்கும் நபர்களுக்கு மழை வந்தால் மிகவும் குஷியாகிவிடும், காரணம் மழையில் காரை நனைய விட்டால் கார் சுத்தமாகிவிடும் என்பதே. அது எல்லாம் சரிதான் ஆனால் அது உங்கள் காரிற்கு நல்லதா? கார் சுத்தமாகுமா? என்பது குறித்து எப்போதாவது யோசித்தது உண்டா? வாங்க அது சரியா என பார்க்கலாம்.

உங்கள் காரை மழையில் நனையவைத்து சுத்தம் செய்வது உங்கள் காரிற்கு சரியான சுத்தத்தை தராது அதற்கு மாறாக மேலும் அதிகமாக காரை மாசடைய வைக்கும். உங்களுக்கு தோணலாம் அது எப்படி காரை மழையில் நனைத்தால் சுத்தமாகாமல் இருக்கும்? சொல்றோம் வாங்க.

மழை நீரில் கார் சுத்தமாகுமா?

மழையில் கார் நனைந்த பின்பு கார் வெளிப்புறத்தில் சுத்தமானது போல தான் தோன்றும். ஆனால் அது நன்றாக மழை பெய்தால் தான் லேசான தூரல் விழுந்தால் கார் மேலும் அழுக்காகும். மழை நீர் சுத்தமாக இருக்கும் என நாம் நம்புவோம். ஆனால் மழை நீர் காற்றில் உள்ள மாசுகளுடன் கலந்து விழுகிறது. இந்த காசுகள் எல்லாம் சேர்ந்து கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி இருக்கும். இந்த நீர் காரின் மீதே இருந்து அது காயும் போது காரின் பெயிண்ட்டை பதம் பார்க்கத் துவங்கும்.

இதன் மூலம் பளபளப்பாக இருக்கும் உங்கள் காரின் பெயிட்டானது மங்கலாக மாற துவங்கும். எனவே காரை மழையில் நனைக்காமல் இருப்பது நல்லது. மலை நீர் எப்போதும் சுத்தமானதாக இருக்கும் என நினைப்பது தவறு, முடிந்தவரை காரை மலையில் நனைக்காமல் இருப்பது நல்லது, அதற்கு கார் பார்க்கிங்கில் காரைநிருத்தலாம் அல்லது வெளியில் நிறுத்தும்போது கவர் வைத்து காரை முழுவதும் மூடலாம்.

வைரஸ்கள் பரவ வாய்ப்பு:

கார் மழையில் நனைந்தால் அது தானாக காயும் வரை பலர் அதனை அப்படியே விட்டுவிடுவார்கள், அப்படி செய்தால் காரில் அதிகமாக பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பாரா வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக நோர்னோ வைரஸ், மற்றும் சால்மோனில்லா பாக்டீரியாக்கள் காரில் அதிக நேரம் ஈரம் இருந்தால் உருவாகும் அந்த பாக்டீரியா மற்றும் வைரல் ஈரம் காய்ந்த பின்பும் காரின் லேரியலேயே இருக்கும் பின்னர் நாம் அந்த இடத்தை தொடும் போது அது நம் கை வழியாக உடலுக்குள் ஏறி உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

பயணத்தின் பொது மழை வந்தால் என்ன செய்வது?

எல்லாம் சரிதான் ஆனால் பயணம் செய்யும்போது மழை வந்தால் என்ன செய்வது என நீங்கள் நினைப்பது புரிகிறது. அதற்காக பயணத்தை தவிர்க்க இயலாது, மழை நின்ற பின்னர் காரை நிறுத்திவிட்டு காற்றில் இருக்கும் நீரை சுத்தமாக துடைத்துவிட்டு செல்வது உங்களுக்கும் காருக்கும் மிகவும் நல்லது. மேலும் காரின் பொழிவு கெட்டுப் போகாமல் இருக்கும். அதே நேரத்தில் அதன் மூலம் கிருமிகள் பரவுவதையும் தடுக்கலாம்

பூஞ்சைகள் வர வாய்ப்பு:

முழுவதுமாக பூட்டப்பட்டு கதவுகளில் கண்ணாடிகள் அடைக்கப்பட்டு இருக்கும் கார்கள் மழையில் நனைந்தால் வெளியில் இருக்கும் குளிர்ச்சியும், காரின் உள்ளே இருக்கும் வெப்பமும் சேர்ந்து கார்களின் சீட்டில் ஈரம் படியவைக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் கார்களின் சீட்டில் பங்கஸ், பூஞ்சைகள் வரை வாய்ப்புகள் உண்டு, இதனை நீங்கள் சுவாசிக்கும்பட்சத்தில் நுரையீரல் பிரச்சனைகள் கூட வரும். மேலும் காருக்குள் துர்நாற்றம் வீசும்.

கார் மழையில் நனையும் போது காரின் ஜன்னல்கள் அல்லது கதவு திறந்திருந்தால் காருக்குள் மழை நீர் செல்ல நேரிடும். அதனால் காருக்குள் இருக்கும் ஏதாவது உதிரிப் பாகங்கள் வழியாக மழை நீர் சென்றால் அது உள்ள உள்ள பாகங்களைச் சேதப்படுத்தும். அப்படி ஏதாவது நடந்துவிட்டால் உங்கள் கார் உங்களுக்குச் செலவு இழுத்துவிடும். அதனால் காரை மழையில் நனைய விடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காரின் முகப்பு கண்ணாடி மழையில் கார் நனையும் போத உட்புறமாகச் சிறிய நீர்த்துளிகள் வந்து காரின் கண்ணாடியில் படியும். அது காயும் போது கண்ணாடியை படிப்படியாக மங்கிப்போக வைக்கும். அதனால் காரை மழையில் நனைய வைக்க வேண்டாம். அப்படி நனைந்தால் கார் சுத்தமாவதை விட மோசமாகத் தான் மாறும். அதனால் நீங்கள் காரை மழையில் நனைய வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்