Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

விமானத்தில் இருக்கை மாறி அமர கூடாது...ஏன் தெரியுமா?

madhankumar April 28, 2022 & 11:44 [IST]
விமானத்தில் இருக்கை மாறி அமர கூடாது...ஏன் தெரியுமா?Representative Image.

நாம் பேருந்துகளில் இருக்கைகளை மாற்றி மாற்றி அமருவதை போல விமானங்களில் இடம் மாறி உக்காந்தா என்ன ஆகும் என தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம். 


விமானத்தில் பயணம் செய்யவேண்டும் என்பது பலருக்கு தற்போது வரை கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வோருக்கு அது அவ்வளவாக பிடிப்பதில்லை. இதற்கு காரணமாக பார்க்கப்படுவது இட நெருக்கடிதான். பொதுவாக பேருந்துகளில் னது பக்கத்துக்கு இருக்கையில் உடல் பருமனாக இருப்பவர்கள் இருந்தால் நாம் வேறு இருக்கைக்கு மாறி கொள்ளலாம். ஆனால் அது விமானத்தில் சாத்தியம் இல்லை. சில சமயங்களில் விமானங்களில் இருக்கைகள் காலியாக இருக்கும். அந்த இருக்கைகளில் அமர்ந்தால் உங்களுக்கு சௌகரியமான பயணம் கிடைக்கும்தான். ஆனால் அதற்காக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து வேறு ஒரு இருக்கையில் மாறி அமரக்கூடாது.


விமானத்தில் இருக்கை மாறினால் என்ன ஆகும்?

நீங்கள் பேருந்தைப்போல் விமானத்தில் இருக்கையை மாற்றி அமர்ந்தாள் விமானம் விபத்து ஏற்படகூட வாய்ப்பு உள்ளது. அது ஏன் என்றால் விமானம் பொதுவாக டேக் ஃஆப் ஆவதற்கு முன் சில கணக்கீடுகளை செய்து வைத்திருப்பார்கள். டேக் ஃஆப் செய்வதற்கான எடை மற்றும் சமநிலை சரியாக உள்ளதா? என்பது மிக முக்கியமான கணக்கீடுகளில் ஒன்று. இந்த நேரத்தில் நீங்கள் உங்களது இருக்கையை மாற்றுகிறீர்கள் என்றால் விமானத்தின் சமநிலையை மாற்றுகிறீர்கள் என்றே அர்த்தம். 

இது குறித்து விமானி ஒருவர் கூறியதாவது:

ஒரு முறை விமானம் டேக் ஃஆப் செய்யும் பொது 4 பயணிகள் தங்கள் இருக்கையை மாற்றி முன்னே வந்து அமர்ந்து கொண்டார்கள் இதன் காரணமாக விமானத்தை 'ரொட்டேட்' செய்யும்போது, பிரச்னைகளை சந்திக்க நேரிட்டது. அப்போது எடை கூடியதை போன்ற உணர்வு ஏற்பட்டது. அது மிகவும் நெருக்கடியான சூழ்நிலையாகும். ஏனென்றால் 'ரன்வே' (Runway) மிகவும் குறுகியதாக இருந்தது. இதுபோன்ற சமயங்களில் எங்களால் விமானத்தை நிறுத்துவதும் இயலாத காரியம் ஆகும்'' என கூறியுள்ளார்.

எனவே அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யும்போது விமான பணியாளர்கள் அனுமதியின்றி வேறு இருக்கைக்கு மாறி அமர்ந்து விடாதீர்கள் இது உங்களுக்கு மட்டுமல்ல உங்களது சக பயணிகளுக்கு ஆபத்தாக அமைந்து விடும். உங்களுக்குஇருக்கை மாறி மாறுவதற்கு அனுமதி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் ஆனால் எந்த காரணம் கொண்டும் அனுமதி இல்லாமல் இருக்கையை மாற்றாதீர். 


ஒரு பயணி 10 வரிசைகள் மாறி அமர்ந்தால் கூட, விமானத்தின் சமநிலை பாதிக்கப்படலாம் என்கின்றனர். இருக்கை மாறி அமர வேண்டும் என நீங்கள் விரும்பினால், விமான ஊழியர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 'எடை பங்கீடு' (Weight Distribution) குறித்து அவர்களுக்கு தெரியும். அதன் அடிப்படையில் நீங்கள் இருக்கை மாறலாமா? மாற கூடாதா? என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்