Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ.5.99 லட்சத்தில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்.. மைலேஜ், வேரியண்ட் விவரங்கள்.. | Hyundai Exter SUV Launched in India

Nandhinipriya Ganeshan Updated:
ரூ.5.99 லட்சத்தில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்.. மைலேஜ், வேரியண்ட் விவரங்கள்.. | Hyundai Exter SUV Launched in IndiaRepresentative Image.

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி மாடலான 'எக்ஸ்டர்' இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் - EX, EX (Optional), S, SX, SX (Optional) மற்றும் SX (Optional) Connect என 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

இந்த மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, டெயில் லைட்கள், அகலமான பாராமெட்ரிக் கிரில் டிசைன், ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ரியர் ஏசி வென்ட்கள், பவர் அவுட்லெட், டிபிஎம்எஸ், இன்பில்ட் நேவிகேஷன், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஹூண்டாய் எக்ஸ்டர் என்ஜின்:

இந்த புதிய எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 6000rpm-ல் 81 hp பவரையும், 4000rpm-ல் 113.8 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். அதேபோல், சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்படுகிறது. 

ஹூண்டாய் எக்ஸ்டர் இண்டீரியர்:

காரின் உட்புறத்தில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டேஷ்கேம், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஃபூட்வெல் லைட்டிங் உள்ளது. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ESC, VSM, HAC, பார்கிங் சென்சார்கள் உள்ளன. 

ஹூண்டாய் எக்ஸ்டர் பரிமாணங்கள்:

மைலேஜைப் பொறுத்தவரை, பெட்ரோல் என்ஜின் 19.4 கிமீ/லி மைலேஜையும், பெட்ரோல் ஏஎம்டி 19.2 கிமீ/லி மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட் 27.1 கிமீ/கிகி மைலேஜையும் கொடுக்கிறது. எக்ஸ்டர் காரின் பரிமாணங்கள் முறையே 3815mm நீளம், 1710mm அகலம் மற்றும் 1631mm உயரம் கொண்டுள்ளது. 2450mm வீல்பேஸ் கொண்டுள்ள காரில் 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. அதேபோல்,  சிஎன்ஜி வேரியண்டில் 185mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு, 391 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொள்ளளவுடன், 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர் விலை:

அட்லஸ் வைட் டைட்டன் கிரே, ஸ்டேரி நைட், காஸ்மிக் புளூ, ஃபியெரி ரெட், ரேஞ்சர் காக்கி, அட்லஸ் வைட் - டூயல்-டோன் ரூஃப், காஸ்மிக் புளூ - டூயல்-டோன் ரூஃப் மற்றும் ரேஞ்சர் காக்கி - டூயல்-டோன் ரூஃப் என்ற ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 

வேரியண்ட்களின் விலைகள் முறையே ஹூண்டாய் எக்ஸ்டர் இ.எக்ஸ் ரூ.6 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் இ.எக்ஸ் (ஆப்ஷனல்) ரூ.6.25 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ் ரூ.7.24 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் ரூ.7.99 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) ரூ.8.63 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) கனெக்ட் ரூ.9.32 லட்சம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்