Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்.. எது பெஸ்ட்? | Maruti Suzuki Jimny vs Mahindra Thar

Nandhinipriya Ganeshan Updated:
மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்.. எது பெஸ்ட்? | Maruti Suzuki Jimny vs Mahindra TharRepresentative Image.

மஹிந்திரா தார் என்பது தற்போது இந்தியாவில் உள்ள டிஃபாக்டோ லைஃப்ஸ்டைல் ​​ஆஃப்-ரோடர் எஸ்யூவியாக இருந்து வருகிறது. ஆனால், தார் 3 கதவுகளுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு போட்டியாக மாருது சுஸூகி ஜிம்னி ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாருடன் ஒப்பிடுகையில் ஜிம்னியில் 5 கதவுகள் இருக்கின்றன. இதுதான் ஜிம்னியின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு ஆஃப்-ரோடர்களுக்கும் இடையே அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். 

ஜிம்னி vs தார் பரிமாணங்கள்:

ஜிம்னியில் கதவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மஹிந்திரா தாரை விட நீளமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. ஜிம்னி மற்றும் தார் என இரண்டு ஆஃப்-ரோடர்களின் நீளமும் 3985 மிமீ தான். உயரத்தை பொறுத்தவரையில் தார் 1896 மிமீ கொண்டது. ஆனால், ஜிம்னி 1720 மிமீ மட்டுமே உயரம் கொண்டது. அகலம் மற்றும் வீல்பேஸ் அளவுகளின் முறையே தார் 1820 மிமீ மற்றும் 2450 மிமீ கொண்டது; ஜிம்னி 1645 மிமீ மற்றும் 2590 மிமீ கொண்டது. ஆகமொத்தம் இரண்டு எஸ்யூவிகளின் நீளமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், தார் உயரமாகவும் அகலமாகவும் இருக்கிறது.

மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்.. எது பெஸ்ட்? | Maruti Suzuki Jimny vs Mahindra TharRepresentative Image

பாடி ஸ்டைல்:

மஹிந்திரா தாரில் உட்பக்கத்தில் நெருகலான கட்டமைப்பே அதன் குறையாக பார்க்கப்படுகிறது. இதை நன்றாக புரிந்துக் கொண்ட மாருதி ஜிம்னியை 5 கதவுகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், வாகனத்தின் அளவில் மாற்றம் இல்லை. மேற்கூரையை பொறுத்தவரையில், ஜிம்னி உலோகத்தால் ஆன மேற்கூரையுடன் வருகிறது. ஆனால், தாரில் சாஃப்-டாப் மற்றும் ஹார்ட்-டாப் என 2 விதமான மேற்கூரை விருப்பம் உள்ளது. இதுவே தாரின் பிளஸ் பாயிண்டாகவும் பார்க்கப்படுகிறது.  

பொதுவாக, தாரில் பின்புற இருக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முன் இருக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டிய உள்ளது. ஆனால், ஜிம்னியில் பின்புற இருக்கைகளுக்கு செல்ல தனி கதவுகள் உள்ளன. இது ஜிம்னியின் பிளஸ் பாயின்டாக பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு ஆஃப்-ரோடர்களிலும் பின்புற ஏசி வென்ட்கள் அல்லது யுஎஸ்பி சாக்கெட்டுகள் இல்லை என்றாலும், தார் மட்டுமே பின்புறத்தில் சாய்ந்திருக்கக்கூடிய இருக்கைகளை வழங்குகிறது. 

ஜிம்னி vs தார் என்ஜின்: 

என்ஜின் விருப்பங்களை பொறுத்தவரை, மஹிந்திரா தார் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. 1.5 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது, இது பின்புற வீல்களை மட்டுமே இயக்கும். அதேபோல், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 128 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோ என்ஜின் 148 பிஎச்பி பவரையு, 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

மாருதி ஜிம்னியை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. இது 103 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு வீல் டிரைவ் தரத்துடன் வருகிறது. 

மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்.. எது பெஸ்ட்? | Maruti Suzuki Jimny vs Mahindra TharRepresentative Image

அம்சங்கள்:

இந்த இரண்டு ஆஃப்-ரோடர்களிலும் டச்ஸ்க்ரீன், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி ஃபங்க்சன் ஸ்டீயரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், டச்ஸ்க்ரீன் அளவுகளை பொறுத்தவரை, ஜிம்னியின்(9 இன்ச்) டிஸ்ப்ளே தாரை (7 இன்ச்) விட 2 இன்ச் பெரியதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஜிம்னியில் கூடுதலாக 6 ஏர்பேக்குகள், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஹெட்லேம்ப் வாஷர்ஸ், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், மிருதுவான பயனர் இடைமுகம் (UI), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. இவை மஹிந்திரா தாரில் கிடையாது. 

விலை பட்டியல்:

தார் பெட்ரோல் 4x4 

விலை 

தார் டீசல் 4x4 

விலை 

ஜிம்னி பெட்ரோல் 4x4 

விலை 

AX (O) MT Hard Top

ரூ.13.87 லட்சம் 

AX (O) MT Hard Top

ரூ.14.49 லட்சம்

Zeta MT

ரூ.12.74 லட்சம்

LX MT Hard Top

ரூ.14.56 லட்சம்

AX (O) MT Convert Top

ரூ.14.44 லட்சம்

Alpha MT

ரூ.13.69 லட்சம்

LX AT Convert Top

ரூ.16.02 லட்சம்

LX MT Hard Top

ரூ.15.35 லட்சம்

Zeta AT

ரு.13.94 லட்சம்

LX AT Hard Top

ரூ.16.10 லட்சம்

LX MT Convert Top

ரூ.15.26 லட்சம்

Alpha AT

ரூ.14.89 லட்சம்

-

-

LX AT Hard Top

ரூ.16.78 லட்சம்

Alpha MT Dual Tone

ரு.13.85 லட்சம்

-

-

LX AT Convert Top

ரூ.16.68 லட்சம்

Alpha AT Dual Tone

ரூ.15.05 லட்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்