Fri ,May 24, 2024

சென்செக்ஸ் 75,418.04
1,196.98sensex(1.61%)
நிஃப்டி22,967.65
369.85sensex(1.64%)
USD
81.57
Exclusive

மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in India

Priyanka Hochumin Updated:
மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in IndiaRepresentative Image.

நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாருதி சுஸுகியின் ஜிம்னி எஸ்யூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனின் ஆரம்ப நிலை Zeta டிரிம் ரூ.12.74 லட்சத்தில் தொடங்கி, டாப்-ஸ்பெக் ஆல்ஃபா டிரிம்களின் விலை ரூ.15.05 லட்சம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா தான் ஐந்து கதவுகள் கொண்ட வெர்சனை பெரும் முதல் நாடாகும். வாடிக்கையாளர்கள் மாருதியின் சந்தா திட்டத்தின் மூலம் ஜிம்னியை மாதாந்திர கட்டணமாக ரூ.33,550க்கு தேர்வு செய்யலாம். இந்த கார் மாருதியின் குருகிராம் ஆலையில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in IndiaRepresentative Image

மாருதி சுஸுகி ஜிம்னி டைமன்ஷன்ஸ் & டிசைன்

மாருதி ஜிம்னி 3,985 மிமீ நீளம் மற்றும் 2,590 மிமீ வீல்பேஸ் அளவைக் கொண்டுள்ளது. இது 3-கதவு மாடலை விட 340 மிமீ நீளமானது. மேலும் இது 1,645 மிமீ அகலம் மற்றும் 1,720 மிமீ உயரம் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் பின்புற கதவில் மிகச் சிறிய 'பயன்படுத்தக்கூடிய' கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

ஜிம்னி டிசைன் அம்சங்கள் - நிமிர்ந்து நிற்கும் தூண்கள், சங்கி ஆஃப்-ரோட் டயர்கள், ஃபிளேர்ட் வீல் ஆர்ச்கள், சுத்தமான மேற்பரப்பு, வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், ஸ்லேட்டட் கிரில் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் டயர் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இந்தியா-ஸ்பெக் மாடலிலும் உள்ளன. 5 கதவுகளைக் கொண்ட ஜிம்னி 5-இன்ச் அலாய் வீல்களில் 195/80 செக்சன் டயர்களால் மூடப்பட்டிருக்கும்.

மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in IndiaRepresentative Image

ஜிம்னி பவர்டிரெய்ன் & பிளாட்பார்ம்

5 கதவு ஜிம்னி வெர்சன் - ஒரு 105hp, 134Nm, 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் நேசுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஜிம்னி பழைய-ஸ்பெக் K15B இன்ஜினைப் பயன்படுத்துகிறது. மாருதி மேனுவல் வேரியண்ட்டுக்கு 16.94kpl மைலேஜ் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்டிற்கு 16.39kpl மைலேஜைத் தருகிறது. ஆஃப்-ரோட் கியரைப் பொருத்தவரையில், ஜிம்னி சுஸுகியின் ஆல் கிரிப் ப்ரோ 4WD சிஸ்டம், மேனுவல் டிரான்ஸ்ஃபர் கேஸ் மற்றும் லோ-ரேஞ்ச் கியர்பாக்ஸ் உடன் ‘2WD-high’, ‘4WD-high’ மற்றும் ‘4WD-low’ மோடுகளைப் பெறுகிறது. இது கரடுமுரடான, லேடர்-பிரேம் சேஸ்ஸால் ஆதரிக்கப்படுகிறது, மேலும் 3-லிங்க் ரிஜிட் ஆக்சில் சஸ்பென்ஷன் மற்றும் எலக்ட்ரானிக் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது. கூடுதலாக, 210மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டு வருகிறது.

மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in IndiaRepresentative Image

ஜிம்னி சிறப்பம்சங்கள்

ஜிம்னியின் ஆல்பா டிரிம் - 9.0-இன்ச் SmartPlay Pro+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் LED ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி அண்ட் கோ, க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உட்பட அனைத்து அம்சங்களையும் பெறுகிறது. பாதுகாப்பு கருதி ஆறு ஏர்பேக்குகள், ESP மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாருதி ஜிம்னி மொத்தம் ஏழு கலர் ஆப்ஷனில் கிடைக்கும். அதில் இரண்டு டூயல்-டோன் நிறமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விலை விவரங்கள்

Zeta MT  - ரூ.12.74 லட்சம்

Alpha MT - ரூ. 13.69 லட்சம்

Alpha MT Dual-tone - ரூ.13.85 லட்சம்

Zeta AT - ரூ.13.94 லட்சம்

Alpha AT - ரூ.14.89 லட்சம்

Alpha AT Dual-tone - ரூ.15.05 லட்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்