Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57
Exclusive

எது 1.20 கோடியா டொயோட்டா வெல்ஃபயர்...இதுல அப்படி என்ன இருக்கு? | Toyota Vellfire Launched in India

Priyanka Hochumin Updated:
எது 1.20 கோடியா டொயோட்டா வெல்ஃபயர்...இதுல அப்படி என்ன இருக்கு? | Toyota Vellfire Launched in IndiaRepresentative Image.

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்ட உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்பொரேஷன் அவர்களின் அடுத்த ஜென் மாடலான 'டொயோட்டா வெல்ஃபயர்' இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.20 கோடி ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெல்ஃபயர் - Hi மற்றும் VIP என்னும் இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது.

காரின் முன் பகுதியில் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்களால் சூழப்பட்ட சிக்ஸ்-ஸ்லாட் கிரில்லிக்கு நடுவில் டொயோட்டா லோகோ பொருத்தப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப்-பிற்கு கீழ் பகல் நேரத்தில் இயங்கும் எல்இடி லாம்ப், U-வடிவ குரோம் ஸ்ட்ரிப் ஆனது இரண்டு ஹெட்லேம்ப்களை இணைக்கும் பம்பர் முழுவதும் இயங்குகிறது. அத்துடன் வெல்ஃபயர் MPV ஆனது டொயோட்டா சேஃப்டி சென்ஸ் ADAS சிஸ்டத்தை பெறுகிறது. இது லேன் டிரேஸ் அசிஸ்ட், ப்ரீ-கொல்லிசன் சேஃப்டி சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்குகள், ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களை பெறுகிறது.  

டொயோட்டா வெல்ஃபயர் இண்டீரியர்:

இதனின் டாஷ்போர்டு குறைவான பட்டன்களுடன் எளிமையான தோற்றத்தை பெற்றுள்ளது. இதற்கான காரணம், பெரும்பாலான செயல்பாடுகள் தற்போது 14-இன்ச் டச் ஸ்கிரீன் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. காரில் பயணிப்பவர்கள் மீடியா, சன் ஷேட்டு மற்றும் கிளைமேட் செட்டிங்கை detachable control panel மூலம் அட்ஜஸ்ட் செய்யலாம். இவற்றை தவிர ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் 60 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்களையும் சேர்த்துள்ளது.

டொயோட்டா வெல்ஃபயர் சீட் விவரக்குறிப்புகள்:

புதிய மற்றும் வசதியான சீட் டிசைன் காரின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்த - பெரிய மேல்நிலை கன்சோல் (large overhead console), பல ஏசி வென்ட்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட புல்-டவுன் சன் ஷேட்கள் உள்ளன. டாப்-ஸ்பெக் வெல்ஃபயர் VIP டிரிம் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் பேக்கேஜுடன் வருகிறது. கூடுதலாக, வெப்பம் மற்றும் காற்றோட்டத்துடன் உள்ளிழுக்கும் டேபிள்களுடன் இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவே Hi டிரிமில், இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான ஓட்டோமான் மற்றும் எட்டு வழி பவர் அட்ஜஸ்ட்டபுள் டிரைவர் சீட் அளிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா வெல்ஃபயர் பரிணாமங்கள்:

வெல்ஃபயர் கார் 4,995 மிமீ நீளம், 1,850 மிமீ அகலம் மற்றும் 1,950 மிமீ உயரம் கொண்டுள்ளது. 3,000 மிமீ வீல்பேஸ் கொண்ட காரில் 193hp, 2.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இ-CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. வெல்ஃபயர் 19.28kpl எரிபொருள் செயல்திறனை வழங்கும் என்று டொயோட்டா கூறுகிறது.

டொயோட்டா வெல்ஃபயர் விலை:

டொயோட்டா வெல்ஃபயர் Hi வேரியண்ட் - ரூ. 1.20 கோடி 

டொயோட்டா வெல்ஃபயர் VIP வேரியண்ட் - ரூ. 1.30 கோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்