Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாடா பன்ச் ரூ.7.10 லட்சத்திற்கு அறிமுகம் - விலை, மைலேஜ், விவரக்குறிப்புகள் | Tata Punch CNG Launched in India

Priyanka Hochumin Updated:
டாடா பன்ச் ரூ.7.10 லட்சத்திற்கு அறிமுகம் - விலை, மைலேஜ், விவரக்குறிப்புகள் | Tata Punch CNG Launched in IndiaRepresentative Image.

இந்தியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் லேட்டஸ்ட் பன்ச் சிஎன்ஜியை அறிமுகம் செய்துள்ளது. ஆரம்ப விலை ரூ.7.10 லட்சத்திற்கு தொடங்கி, டாப்-ஸ்பெக் வேரியண்ட் ரூ.9.68 லட்சம் வரையில் கிடைக்கிறது. இந்த புதிய டாடா பன்ச் - Pure, Adventure, Adventure rhythm, Accomplished, Accomplished Dazzle S உள்ளிட்ட ஐந்து வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது.

டாடா பன்ச் என்ஜின்:

டாடா பன்ச் சிஎன்ஜியில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் எஞ்சினுடன் வருகிறது. இதன் எஞ்சின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க்கையும், CNG-வுடன் 73.4hp மற்றும் 103Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வருகிறது. மேலும் நேரடியாக சிஎன்ஜி பயன்முறையில் கார் எஞ்சினை தொடங்கலாம். இதில் இருக்கும் 60 லிட்டர் டேங்க் இரண்டு சின்ன டேங்காக பிரித்து, ஸ்டோரேஜை விடுவிக்க பூட் (Boot) தளத்தின் கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பன்ச் சிஎன்ஜி 210 லிட்டர் பூட் திறன் கொண்டது, இது பெட்ரோலில் இயங்கும் பன்ச்சை விட 156 லிட்டர் குறைவு.

டாடா பன்ச் இண்டீரியர்:

மற்ற டாடா சிஎன்ஜி மாடல்களைப் போலவே டெயில்கேட்டில் ‘ஐசிஎன்ஜி’ பேட்ஜ் சேர்க்கப்படுவதைத் தவிர, பன்ச் சிஎன்ஜி வெளிப்புற டிசைனில் வேற மாற்றங்கள் எதுவும் இல்லை. அதே போல், பன்ச் சிஎன்ஜியில் இண்டீரியரில் மாற்றங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டாப்-ஸ்பெக் டிரிமில் - 7.0 இன்ச் டச் ஸ்கிரீன், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 16 இன்ச் அலாய் வீல்கள், இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட் மற்றும் சன்ரூஃப் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெட்ரோலில் இயங்கும் பன்ச் மாடலிலும் அளிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் விலை:

வேரியண்ட்களின் விலை இதோ டாடா பன்ச் சிஎன்ஜி Pure ரூ.7.10 லட்சம், டாடா பன்ச் பெட்ரோல் Pure ரூ.6 லட்சம், டாடா பன்ச் சிஎன்ஜி Adventure ரூ.7.85 லட்சம், டாடா பன்ச் பெட்ரோல் Adventure ரூ.6.90 லட்சம், டாடா பன்ச் சிஎன்ஜி Adventure Rhythm ரூ.8.20 லட்சம், டாடா பன்ச் பெட்ரோல் Adventure Rhythm ரூ.7.25 லட்சம், டாடா பன்ச் சி என்ஜி Accomplished ரூ.8.85 லட்சம், டாடா பன்ச் பெட்ரோல் Accomplished ரூ.7.75 லட்சம், டாடா பன்ச் சிஎன்ஜி Accomplished Dazzle S ரூ.9.68 லட்சம், டாடா பன்ச் பெட்ரோல் Accomplished Dazzle S ரூ.8.65 லட்சம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்