Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனித்துவமான அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 விலை எவ்வளவு? | Harley Davidson X440 Price

Nandhinipriya Ganeshan Updated:
தனித்துவமான அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 விலை எவ்வளவு? | Harley Davidson X440 PriceRepresentative Image.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 என்பது 3 வேரியண்ட்களில் 4 வகை வண்ணத்தேர்வுகளில் கிடைக்கும் க்ரூஸர் பைக் ஆகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான ப்ரீயம் பைக்கான ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இதில் 440சிசி ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6,000 rmp இல் 27 bhp பவரையும், 4,000 rmp இல் 38 nm டார்க்கையும் உருவாக்கும். இது 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள. 

முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. சுமார் எடை 190.5 கிலோ கொண்டுள்ள இந்த பைக்கில் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ள இந்த பைக்கின் பேசிக் மாடல் (டெனிம்) வயர்-ஸ்போக் வீல்களுடன் வருகிறது. பின்னர், மிட் வேரியண்ட் (விவிட்) அலாய் வீல்கள் மற்றும் டூயல்-டோன் ஃபினிஷுடன் வருகிறது. டாப்-வேரியண்ட் (எஸ்), டயமண்ட்-கட் அலாய் வீல்களுடன் வருகிறது. 

தனித்துவமான அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 விலை எவ்வளவு? | Harley Davidson X440 PriceRepresentative Image

அம்சங்களை பொறுத்தவரை, Harley Davidson X440 ஆனது, ஹார்லி-டேவிட்சன் பிராண்டிங் கொண்ட வட்டமான ஹெட்லைட், LED லைட்டிங், மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான USB போர்ட், ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், ப்ளூடூத் இணைப்பு மற்றும் சைட்-ஸ்டாண்ட் அலர்ட் ஆகியவற்றை காட்டும் 3.5-இன்ச் TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

விலையை பொறுத்தவரையில் பேசிக் வேரியண்ட் டெனிம் (Denim) ரூ.2,39,500 க்கும், மிட் வேரியண்ட் விவிட் (Vivid) ரூ.2,59,500 க்கும், டாப் வேரியண்ட் எஸ் (S) ரூ.2,79,500 க்கும் வாங்க கிடைக்கிறது. லிட்டருக்கு 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும் இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ்400, மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்