Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கீவே நிறுவனத்தின் புதிய 300cc அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர்.. இதுல இப்டியொரு வசதி இருக்கா? | Keeway Vieste 300 XDV Adventure Scooter

Nandhinipriya Ganeshan Updated:
கீவே நிறுவனத்தின் புதிய 300cc அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர்.. இதுல இப்டியொரு வசதி இருக்கா? | Keeway Vieste 300 XDV Adventure ScooterRepresentative Image.

சீனாவுக்கு சொந்தமான ஹங்கேரி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கீவே (Keeway) அதன் புதிய 300சிசி அட்வென்ச்சர் வகை ஸ்கூட்டரான வீஸ்டே XDV 300ஐ தற்போது வெளிநாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வீஸ்டே எக்ஸ்டிவி 300 (XDV 300) அட்வென்ச்சர் ஸ்கூட்டரானது, கீவே நிறுவனம் விற்பனை செய்துவரும் வீஸ்டே 300 (Vieste 300) ஸ்கூட்டரை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது. 

வீஸ்டே 300 என்பது ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனைவிட அதிக பிரீமியம் மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட வாகனமாகவே தற்போது இந்த புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை கீவே மோட்டார் உருவாக்கி இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் அட்வென்சர் ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் முன்பக்கம் ஒரு பெரிய அப்ரோன், பிளாஸ்டிக் கிளாடிங் வசதி, அட்வென்ச்சர் செல்ல தேவையான மிகப்பெரிய விண்ட் ஸ்க்ரீன், உயரமான அகலமான ஹாண்டில் பார் வசதி, சிங்கள் பீஸ் சீட் போன்றவை உள்ளது. 

எஞ்ஜினை பொறுத்த வரை, 278 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சினால் 18.4 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். இத்துடன், சிவிடி கியர்பாக்ஸ் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் ஃபுல் LED லைட்டிங், LCD கிளஸ்டர் வசதி, சிங்கள் ஸ்டெப் சாடல், கிராப் ரைல், ஆன்டி ஸ்கிட் ஸ்டீல் பிளேட் வசதிகள் உள்ளன. தோற்றத்தின் அடிப்படையிலும் மிகவும் முரட்டுத் தனமான அட்வென்ச்சர் ஸ்கூட்டர் போன்றே தோற்றம் தருகிறது. 

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஸ்கூட்டரின் முன்பக்கம் பிரீமியம் KYB USD போர்க், KYB டூயல் ஷாக் வசதி, 13 இன்ச் வீல், அகலமான டயர்கள், 240mm முன்பக்க டிஸ்க் பிரேக், 220mm பின்பக்க டிஸ்க் பிரேக் வசதிகள் உள்ளன. வெள்ளை மற்றும் நீலம் என இரு விதமான நிறங்களில் புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி விற்பனைக்குக் கிடைக்கும். வெளிநாடுகளில் மட்டுமே விற்பனையில் உள்ள இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தினால் அதன் விலையானது ரூ.3.25 லட்சம் வரையில் இருக்கும். ஏனென்றால், இது ஒரு ப்ரீமியம் மாடல்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்