Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3.5 லட்சத்துக்கு ஒரு ஸ்கூட்டரா...? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த Sixties 300i….

Manoj Krishnamoorthi Updated:
3.5 லட்சத்துக்கு ஒரு ஸ்கூட்டரா...? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த Sixties 300i….Representative Image.

Keeway டூவிலர் காஸ்டிலியான பிராண்டு என்றே சொல்லலாம். இதன் கிளாசிக்கான லுக் மற்றும் கவர்ச்சியான கலர் காமினேஷனில் வெளிவரும் வாகனங்கள் எப்போதும் நம்மை ஒரு நொடி அசந்து பார்க்க வைக்கும்.  அந்த அளவு ஒரு ராயல் லுக்கில் Keeway டூவீலர் இருக்கும். சீனாவை பூர்வீகமாக கொண்ட Keeway உற்பத்தியான Sixties 300i ஸ்கூட்டரின் சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். 

3.5 லட்சத்துக்கு ஒரு ஸ்கூட்டரா...? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த Sixties 300i….Representative Image

Keeway Sixties 300i

ஸ்கூட்டர் என்பதால் 100 அல்லது 120 cc வண்டி என்று நினைக்க வேண்டாம். BS6 விதிமுறையில் 278.2 cc வாகனமாக உருவாகிய Keeway Sixties 300i முன் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் கொண்டது ஆகும்.  இதன் anti- locking பிரேகிங் சிஸ்டம் நமக்கு அதிகபட்சம் 145 km வேகத்தில் சென்றாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். 

10 லிட்டர் ஃபியல் டேக் கொண்ட மைலேஜ் 27.73 kmpl என தெரிவிக்கப்பட்டுள்ளது. 278.2cc வாகனமான Sixties 300i 18.4 bhp பவரை @ 22 Nm டார்க்கில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும். டூயல் ABS நமக்கு வண்டியின் பாதுகாப்பை உறுதி செய்யும். 

ரெட்ரோ ஸ்டைல் லுக்கில் உருவாகி இருக்கும் இதன் முன்புறம் நல்ல லுக் அளிக்கிறது. ரெட்ரோ லுக் இருந்தாலும் LED headlight, LED tail  light, semi- digital cluster, USB சார்ஜர் போன்றவை லேட்டஸ் தரத்தில் உள்ளது. 12 இன்ச்  டியூப்லெஸ் டயர்ல் உருவான Sixties 300i ஸ்கூட்டரின் மொத்த எடை 146 kg ஆகும். எடை மற்ற ஸ்கூட்டரை போல இல்லாததால் கையாள சிறிது நாட்கள் எடுக்கும், ஆனால் ஒருமுறை பழகினால் இந்த வண்டி நம் ஃபேவரைட் லிஸ்டில் வந்துவிடும்.  

Keeway பொருத்தவரை நிறங்களில் மிகவும் கவனம் இருக்கும். ஒவ்வொரு கலர் வேரியண்டும் வித்தியாசமான விலையில் இருக்கும். ஏறக்குறைய பைக்கை போல 200 cc யில் உருவாகிய Sixties 300i மூன்று வேரியண்டில் கிடைக்கிறது. Matt Grey, Matt Light Blue, Matt White போன்ற நிறங்களில் விற்பனையாகும் இதன் 3.59 லட்சம் முதல் நகரங்களுக்கு மாறுபடும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்