Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிக குறைந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. முன்னாடியே ஆர்டர் போட்டால் செம்ம ஆஃபர் இருக்கு.. | Ola S1 X Electric Scooter

Nandhinipriya Ganeshan Updated:
மிக குறைந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. முன்னாடியே ஆர்டர் போட்டால் செம்ம ஆஃபர் இருக்கு.. | Ola S1 X Electric ScooterRepresentative Image.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் மூலம் மாறுபட்ட கருத்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஓலா எஸ்1' என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் தனது எலக்ட்ரிக் பயணத்தை தொடங்கிய ஓலா நிறுவனம், ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) போன்ற பல தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டன. 

ரூ.1.10 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்1 ஏர் தான் ஓலா நிறுவனத்தின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. இதனாலேயே எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேலே கூறிய இரண்டு மாடல்களை காட்டிலும் மிக குறைந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றி முழுமையான விபரங்களை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

ஓலா எஸ்1 எக்ஸ் விவரக்குறிப்புகள்:

இந்த புதிய எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டாரனது, S1 X (2kWh), S1 X (3kWh) மற்றும் S1 X+ என்ற மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று வேரியண்ட்களிலும் 6kW உச்ச ஆற்றலை வழங்கும் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை மாடலின் அதிகபட்ச வேகம் 85kmph ஆகவும், S1 X (3kWh) மற்றும் S1 X+க்கு 90kmph ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்ட S1 X மற்றும் S1 X+ க்கு தோராயமாக 5.5 வினாடிகளும், 2kWh வேரியண்டிற்கு 7.9 வினாடிகளும் ஆகும். 

மேலும், இந்த மூன்று வேரியண்ட்களுமே ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரை செல்லும். ஹோம் சார்ஜரைப் பயன்படுத்தி, மூன்று வேரியண்ட்களிலுமே பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.4 மணிநேரம் ஆகும். S1 X மற்றும் S1 X+ 500W போர்ட்டபிள் சார்ஜருடனும், 2kWh வேரியண்ட் 350W சார்ஜருடனும் வருகிறது.

ஓலா எஸ்1 எக்ஸ் அம்சங்கள்:

Ola S1 X இன் முக்கிய அம்சங்களில் பல்வேறு ரிவர்ஸ் மோட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு மற்றும் இரட்டை LED புரொஜெக்டர்கள் ஆகியவை அடங்கும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த அம்சங்கள் மாறுபடலாம். இன்னும் கூடுதலாக இதில் எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று வகையான ரைடிங் மோட் வசதிகளும் உள்ளன. 

ஓலா எஸ்1 எக்ஸ் விலை:

S1X (2kWh) வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.79,999  ஆகவும், S1X (3kWh) மற்றும் S1 X+ மாடல்களின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.89,999 மற்றும் ரூ.99,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலைகள் ஆகஸ்ட் 21, 2023 வரை மட்டுமே. ஆகஸ்ட் 21க்குப் பிறகு, 2kWh வேரியண்ட்டிற்கு ரூ.89,999 ஆகவும், 3kWh வேரியண்ட்டிற்கு ரூ.99,999 ஆகவும், S1X+ வேரியண்ட்டிற்கு ரூ.1,09,999 ஆகவும் (எக்ஸ்-ஷோரூம்) விலை உயர்த்தப்படும். S1X (3kWh) மற்றும் S1X (2kWh) வேரியண்டிற்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு கட்டணம் ரூ.999 ஆகும்.  வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, ரெட் வெலாசிட்டி, மிட்நைட், ஃபன்எம்கே, ஸ்டெல்லர், வோக், பொர்செலைன் ஒயிட் மற்றும் லிக்கிவிட் சில்வர் என ஏழு வகையான வண்ண விருப்பங்கள் உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்