Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் 20 மாதத்தில் இத்தன லட்சம் டெலிவரியா? அப்படியென்ன இந்த காருல ஸ்பெஷல்.. | Mahindra XUV700

Nandhinipriya Ganeshan Updated:
வெறும் 20 மாதத்தில் இத்தன லட்சம் டெலிவரியா? அப்படியென்ன இந்த காருல ஸ்பெஷல்.. | Mahindra XUV700 Representative Image.

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, அதன் ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான XUV700 மாடலின் விற்பனையில் வரலாறு படைத்துள்ளது. அதாவது மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2021 இல், அதன் பிரபலமான எஸ்யூவியான மஹிந்திரா XUV700 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது இரண்டே ஆண்டுகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து காட்டுவதாக அறிவித்திருந்தது. ஆனால், அந்த இலக்கை வெறும் 20 மாதங்களுக்குள்ளேயே அடைந்துவிட்டது. மஹிந்திரா போர்ட்ஃபோலியோவிலிருந்து இந்த மைல்கல்லை எட்டிய முதல் எஸ்யூவியும் இதுதான். 

அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 12 மாதங்களுக்குள், மஹிந்திரா எக்ஸ்யூவி700 இன் 50,000 யூனிட்களை வெற்றிகரமாக விநியோகித்தது, அதைத் தொடர்ந்து அடுத்த 8 மாதங்களில் கூடுதலாக 50,000 யூனிட்களை வழங்கியது. அதாவது, மே 2023 இல் மஹிந்திரா எக்ஸ்யூவி700 க்கான 1 லட்சம் உற்பத்தி மைல்கல்லை பதிவு செய்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு, அற்புதமான செயல்திறன், அதிநவீன அனுபவம், சிறந்த தொழில்நுட்பம், மற்றும் மலிவு விலை உள்ளிட்டவற்றால் மஹிந்திரா எக்ஸ்யூவி700 தன்னை சிறந்த எஸ்யூவியாக நிலைநிறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது 2022ல் இந்தியாவின் சிறந்த கார் என்ற விருதையும் பெற்றுள்ளது. இதுவே, லட்சக்கணக்கில் விற்பனையாவதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ஜின்:

30 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரானது, 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய இரண்டு வகையான என்ஜின் விருப்பங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜினானது 200 bhp குதிரை திறனையும், 380 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல், இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் டீசல் எஞ்சினில், முதல் வேரியண்ட் 155 bhp குதிரை திறனையும் 360 nm டார்க்கையும், இரண்டாவது வேரியண்ட் 185 bhp குதிரை திறனையும் 4520 nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இரண்டுமே மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கின்றன. 

மஹிந்திரா எக்ஸ்யூவி700 அம்சங்கள்:

மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஆனது, 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், LED ஹெட்லைட்கள், LED DRLகள், LED டெயில்லைட்கள் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, டயர் பிரஷர் மானிட்டர், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் நிலை-1 ADAS அம்சங்களையும் கொண்டுள்ளது. 

மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரின் விலை ரூ. 14 லட்சம் முதல் ரூ. 26.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) வரை இருக்கும். மேலும், இதன் 5 சீட்டர் வேரியண்ட்கள் கியா செல்டாஸ், டோயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக உள்ளது. அதேப்போல்,  7 சீட்டர் வேரியண்ட்கள் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்