Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Petrol Price: அக்டொபர் முதல் அதிரடியாய் குறையும் பெட்ரோல் விலை...மத்திய அரசு அறிவிப்பு..!

madhankumar May 12, 2022 & 12:13 [IST]
Petrol Price: அக்டொபர் முதல் அதிரடியாய் குறையும் பெட்ரோல் விலை...மத்திய அரசு அறிவிப்பு..!Representative Image.

பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனாலை கலக்கும் முயற்சியில் இந்தியா வெற்றியடைந்துள்ளது. இதனால் வரும் அக்டொபர் மாதம் முதல் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் பெட்ரோல் விலையானது அதிகரித்துகானப்படுகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.110-ஐயும் கடந்து விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்திற்கு பல காரங்கள் கூறப்பட்டாலும், இதனை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்ற குற்றசாட்டுகள் எழுந்தவனம் தான் உள்ளன. இதனால் தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டேதான் போகிறது.

கச்சா எண்ணெய்:

பெட்ரோலை பொறுத்தவரையில் அது கச்சா எண்ணெயில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் இந்தியா 185 டன் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அதன் மதிப்பு அமெரிக்க டாலர் மதிப்பில் 551 கோடியாகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு வெளிநாடுகளையே சார்ந்திருக்கவேண்டிய சூழ்நிலை தொடர்ந்துவருகிறது. 

எத்தனால் எரிபொருள்:

இந்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை எப்படி குறைப்பது அதனை இந்தியாவிலே எப்படி உருவாக்குவது என்ற யோசனையில் இறங்கியது. அதற்கு கிடைத்த விடைதான் எத்தனால். எத்தனால் என்பது பெட்ரோலை போன்று ஒரு எரிபொருள்தான் அதனால் இந்த எத்தனாலை பெட்ரோலுக்கு மாற்றாக கொண்டுவரலாம் ஆனால் இந்தியாவில் அந்த அளவிற்கு எத்தனாலை தயாரிக்கும் வசதிகள் இன்னும் இல்லை, அதை எப்படி உருவாக்குவது எடுத்தால் இந்த அமைப்பு யோசித்துவருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த நிதி ஆயோக் அமைப்பு E20 என்ற ப்ரோகிராமை அறிமுகம் செய்தது, அது என்னவென்றால் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்கும் பணியை வெற்றிகரமாக முடிப்பதுதான். அப்படி செய்தால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தலாம் என கூறப்பட்டது. அதன்படி 2022க்குள் பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலை கலக்கும் பணியில் வெற்றி பெறுவது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி இந்தியா பெட்ரோலில் 9.45 சதவீதம் எத்தனால் கலக்கும் முயற்சியில் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு அதை 10 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அது வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் எனத் தெரிகிறது. அப்படியாக அக்டோபர் மாதத்திற்குள் இந்த 10 சதவீத பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பட்சத்தில் பெட்ரோலுக்கான வரி விதிப்பில் மாற்றம் வரும்.

பசுமை வரி:

பெட்ரோலுக்கு பசுமை வரி என்பது நமது நாட்டில் விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி விதிக்கப்படும் வாரியானது பெட்ரோலினால் ஏற்படும் மாசுவை குறைக்க பயன்படுத்தப்படும். இந்நிலையில் பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கப்பட்டால் இந்த பசுமை வரியை செலுத்த தேவையில்லை இதனால் இந்த வரி ரத்தாகும், அப்படி வரி ரத்தனால் பெட்ரோல் விலை ரூ.2 குறையும். 

எத்தில் ஆல்கஹால்:

எத்தனால் என்பது எத்தில் ஆல்கஹால் ஆகும், இது விவாசாய கழிவுகளில் இருந்து எடுக்கப்படுகிறது. உதாரணமாக கரும்பு சக்கை, சோள கழிவுகள் ஆகியவற்றில் இருந்துஇ எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த எத்தனாலை பெட்ரோலுக்கு மாற்றாக பயன்படுத்துவது இந்திய போன்ற நாடுகளுக்கு பொருத்தமற்றது என்ற ஒரு ஆய்வு சொல்கிறது. இந்தியா உலகின் பசி கொண்ட நாடுகளின் 116 நாடுகள் கொண்ட பட்டியலில் 101வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களை இதற்காகப் பயன்படுத்துவது முறையற்றது என்றும், பெட்ரோல் வாகனங்களை விட மின்சார வாதங்களை பயன்படுத்துவதுதான் இதற்கு தீர்வு என கூறியுள்ளது.

பயோ டீசல்:

பெட்ரோலை போல டீசலில் பயோ டீசலை கலக்கும் பணியை 2030க்குள் முடிக்கும் முயற்சியை இந்திய கையில் எடுத்துள்ளது. அப்படி நடந்தால் இனி பெட்ரோலும், டீசலும் கலப்படமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த கலப்படம் சுற்றுசூழலை பெரிதளவில் பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் வாகனங்களின் மைலேஜ் திறன் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வாகனங்களை நிறுவனங்களை தயாரிக்கும் போது வாகனத்திற்கான விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை