Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜூன் 2023 மாதத்தில் வெளியாகப்போகும் கார் என்னென்ன தெரியுமா? | Upcoming Cars in June 2023

Priyanka Hochumin Updated:
ஜூன் 2023 மாதத்தில் வெளியாகப்போகும் கார் என்னென்ன தெரியுமா? | Upcoming Cars in June 2023Representative Image.

இந்தியாவில் ஜூன் மாதத்தில் வெளியாகப்போகும் கார் வகைகள், தேதி, விலை உள்ளிட்ட விவரங்களை இந்தபதிவில் பார்க்கலாம்.

ஹோண்டா எலிவேட்: ஜூன் 6, 2023

ஹோண்டாவின் புதிய SUV இந்தியாவில் அதன் உலகளாவிய அறிமுகத்தை வரும் ஜூன் 6, 2023 அன்று நடைபெறுகிறது. மேலும் இந்த காரின் விலை பற்றிய விவரங்கள் ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

எலிவேட் என்று அழைக்கப்படும், SUV தற்போதைய தலைமுறை ஹோண்டா சிட்டியின் அதே தளத்தைப் பகிர்ந்து கொள்ளும். இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT உடன் அதே 1.5-லிட்டர் பவர்டிரெய்னைப் பெறுகிறது. இந்தியாவில் BS6 விதிமுறைகள் காரணமாக CR-V நிறுத்தப்பட்ட பிறகு, ஹோண்டாவின் முதல் SUV இதுவாகும். மேலும் முக்கியமாக எலிவேட் டீசல் எஞ்சினைப் பெறாது என்று கூறப்படுகிறது.

மாருதி சுஸுகி ஜிம்னி: ஜூன் 7, 2023

பலரும் எதிர்பார்க்கப்படும் மாருதி சுஸுகி ஜிம்னி ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. கடந்த ஜனவரி 2023 முதல் இந்த காருக்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று வரையில் 30,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் உறுதியாக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்று சரிசமமாக பிரிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

ஜிம்னி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் 105hp மற்றும் 134Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படலாம். அனைத்து ஜிம்னிகளும் 4x4 வெர்சனில் கிடைக்கும் என்றும், மஹிந்திரா தாரில் இருப்பது போல நிலை 4x2 வெர்சன் இருக்காது என்பதையும் மாருதி சுசுகி உறுதிப்படுத்தியுள்ளது.

Mercedes-AMG SL55: ஜூன் 22, 2023

இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு 5வது தலைமுறை Mercedes-AMG SL கிடைத்தது. அதன் பின்னர் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்திய சந்தையில் மீண்டும் புதிய ஏழாவது தலைமுறை Iconic Mercedes SL ரோட்ஸ்டர் அறிமுகமாக உள்ளது.

Mercedes-AMG SL55 469hp, 700Nm, இரட்டை-டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4.0-லிட்டர் V8 மற்றும் ஒன்பது-வேக டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இவரின் மூலம் SL55 3.9 வினாடிகளில் 0-100kph இலிருந்து இயக்கும் என்று Mercedes கூறுகிறது. மேலும் இது 4-வீல் டிரைவுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 4.7-மீட்டர் ஸ்போர்ட்ஸ்காரை டிராஃபிக்கில் எளிதாக இயக்குவதற்கு 4-வீல் ஸ்டீயரிங் கூட பெறுகிறது. இந்த கார் 4 இருக்கைகள் மற்றும் fabric roof கொண்டு வருகிறது. இது முந்தைய தலைமுறைகளில் பயன்படுத்தப்பட்ட மெட்டல் ரூஃப் விட 21 கிலோ எடை குறைவானது என்று நிறுவனம் கூறுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்