Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் ஓலா முதலீடு.. இத்தன பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி.. மாஸ் காட்டும் தமிழ்நாடு.. | Ola Investment in Tamil Nadu

Nandhinipriya Ganeshan Updated:
தமிழகத்தில் ஓலா முதலீடு..  இத்தன பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி.. மாஸ் காட்டும் தமிழ்நாடு.. | Ola Investment in Tamil NaduRepresentative Image.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பிற்கு பின்பு 2022ல் இருந்து தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேற் மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. 

கொரோனா லாக் டவுன் காலக்கட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. 2022 ஆம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது.

தமிழகத்தில் ஓலா முதலீடு..  இத்தன பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி.. மாஸ் காட்டும் தமிழ்நாடு.. | Ola Investment in Tamil NaduRepresentative Image

இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலமாக 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான் தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு 4 சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.  

மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இதற்காக, தமிழக அரசுக்கும் ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்துக்கும் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி 19, 2023 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்