Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Nose Shape and Personality: மூக்கில் இத்தன வகையா? உங்க மூக்கின் வகையை வைத்தே நீங்க இப்படிதா என்று கண்டுபிடித்துவிடலாம்….!!

Nandhinipriya Ganeshan June 17, 2022 & 18:30 [IST]
Nose Shape and Personality: மூக்கில் இத்தன வகையா? உங்க மூக்கின் வகையை வைத்தே நீங்க இப்படிதா என்று கண்டுபிடித்துவிடலாம்….!!Representative Image.

Nose Shape and Personality: பல ஆண்டுகளாக, நமது மூக்கின் வடிவத்திற்கும் நமது மரபணு வரலாற்றிற்கும் உள்ள தொடர்பைப் படிக்க பல ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆம், நமது மூக்கின் வடிவத்தை வைத்து நமது பர்சனாலிட்டி மற்றும் கேரக்டரை சொல்லிவிடுவார்களாம். இப்போது, உங்கள் மூக்கின் வடிவம் (types of noses) உங்கள் ஆளுமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். 

ரோமானிய மூக்கு | Roman Nose Personality

ரோமானிய மூக்கு உடையவர்கள், மிகவும் வலுவான ஆளுமை கொண்டவராக இருப்பார்கள். சவால்விட்டு அதில் சந்தோசப்படும் நபராக இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் ஒரு சிறந்த தலைவராக இருப்பீர்கள். ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் எப்போதும் சோம்பல்படமாட்டீர்கள். அதுமட்டுமல்லாமல், எதையும் எடுத்தோம் கவுத்தோம் என்றும் முடிவு எடுக்க மாட்டீர்கள். ஒரு சிக்கலின் இருபக்கங்களையும் தெரிந்து அதன்பின்னர் புத்திசாலிதனமாக செயல்படுபவர். 

நுபியன் மூக்கு | Nubian Nose Personality

சாதாரணமான மக்களைப் போல் இல்லாமல் தனித்துவமான ஆளுமையால் தனித்து நிற்பவர். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த மூக்கு வகைக்கு சிறந்த உதாரணம். இந்த மூக்கைக் கொண்டவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள், எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் அடக்கமாகவும் அமைதியாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு இணக்கமான குடும்ப நபராகவும் காணப்படுவார்கள். எப்பொழுதும் அவர்கள் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு, தொழில் வாழ்க்கையின் எந்த உயரத்தை அடைந்தாலும், குடும்பத்தை அவர்களின் வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்வார்கள். 

நேரான மூக்கு | Straight Nose Personality

நேரான மூக்கை கொண்டவர்கள், அதிக தனிப்பட்ட ஈர்ப்பு, தெளிவான சிந்தனை, சகிப்புத்தன்மை, பொறுமை, இரக்கம், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள். மிகவும் உறுதியான, நடைமுறை மற்றும் விவேகமுள்ள நபர். உங்கள் மீது அன்பாக இருப்பவர்களுக்கு எதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு ரகசியத்தை சொல்ல ரகசியமாக வைத்துக் கொள்ள முடியும் என்றால் அது உங்களால் மட்டுமே முடியும். அதாவது, உங்களை நம்பி ஒருவர் ரகசியத்தை சொன்னால், அவர்களின் நம்பிக்கையை உடைக்கமாட்டீர்கள். இத்தகைய மூக்கு வடிவங்களைக் கொண்ட ஆண்களும் பெண்களும் ஊடகங்கள், தனிப்பட்ட உதவியாளர்கள், மாடலிங் அல்லது சில கலைத் தொழில் போன்ற வேலைகளில் பெரும்பாலும் காணப்படுகின்றனர். 

வளைந்த மூக்கு | Crooked Nose Personality

இந்த மூக்கைக் கொண்டவர்கள் மிகவும் நேரடியான மற்றும் எளிமையானவர்கள். எப்போதும் கேட்பவராக தான் இருப்பார்கள். அவர்கள் எந்த கருத்தையும் உருவாக்குவதற்கு முன்பு கவனமாக சிந்திக்கவும், கேட்கவும் புரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். அவர்கள் சிறந்த நண்பர்கள் மற்றும் சரியான கூட்டாளர்களாக இருப்பார்கள். 

சதைப்பற்றுள்ள மூக்கு | Fleshy Nose Personality

இத்தகைய மூக்கு உள்ளவர்கள், எப்போது சிந்தனையாளர், புத்திசாலி, விவேகமானவராக இருப்பார்கள். இவர்கள் தாராளமாகவும், கனிவாகவும், உணர்திறன் மிக்கவராகவும், உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருக்கக்கூடியவர்கள். அதுமட்டுமல்லாமல், எந்த செயலிலும் வேகமாக சிந்தித்து வேகமாக செயல்படுபவர்களாக இருப்பார்கள். பொய் பேசி அதிக நேரத்தை வீணாக்காமல் உண்மையைப் பட்டுபட்டு என்று போட்டு உடைத்துவிடுவீர்கள்.

பட்டன் மூக்கு | Button Nose Personality

இந்த மூக்கைக் கொண்டவர்கள் எப்போதும் அசாதாரணமான இயல்புடைவர்களாக இருப்பார்கள். இது உலகின் மிக அழகான வகை மட்டுமல்ல, இவர்கள் ஆளுமையிலும் அழகாக இருக்கும். இவர்களுக்கு சும்மா உட்கார பிடிக்காது. இவர்கள் ஒவ்வொரு மணிநேரத்தையும் புத்திசாலித்தனமாகவும், துல்லியமான திட்டமிடலுடனும் செலவழிப்பார்கள். திட்டமிட்ட வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பதில் திறமைசாலியாக இருப்பீர்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அல்லது எப்படி விரும்புகிறீர்களோ அதையே பெறுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்களால் தாங்க முடியாது. 

பருந்து மூக்கு | Hawk Nose Personality

பருந்து மூக்கு வடிவத்தை கொண்டிருப்பவர்கள், ரேஸர் போன்ற கூர்மையான உள்ளுணர்வு மற்றும் வணிகத்தைப் பற்றிய நல்ல அறிவையும் கொண்டிருப்பார்கள். வாய்ப்புகளைக் கண்டறிவதில் உங்களுக்குப் பருந்தின் கண் இருக்கிறது. ஆன்மீக விஷயங்களிலும் உங்களுக்கு தனி ஆர்வம் உண்டு. வெற்றிக்கான உங்கள் சொந்த பாதையை செதுக்குவதில் நீங்கள் மிகவும் திறமையாகவும் வெற்றிகரமாகவும் இருக்கிறீர்கள். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிக அளவில் உள்ளது. நீங்க உண்மையை சொல்ல யாருக்காவும், எதற்காகவும் பயப்பட மாட்டீர்கள். உங்கள் கருத்தை உரக்கச் சொல்வீர்கள். அத்தகைய மூக்கு கொண்ட பெண்கள் சிறந்த கல்வித் திறன்களையும் வணிக புத்திசாலித்தனத்தையும் பெறுபவர்களாக இருப்பார்கள். 

சிறிய மூக்கு | Small Nose Personality

சிறிய மூக்கை கொண்டிருப்பவர்கள், பொதுவாக அழகாகவும், மகிழ்ச்சியாகவும், பாசமாகவும் இருப்பார்கள். ஒரு உதவிகரமான நபர் மற்றும் இலக்குகளை அடைய உங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்துவார்கள். ஒரு காரியத்தை முடிப்பதில் கெட்டிக்காரர். எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். அதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு கவலையே படமாட்டார்கள். எது நடந்தாலும் நடக்கட்டும் பார்த்துக் கொள்வோம் என்பது போன்ற மனநிலை படைத்தவர். 

பெரிய மூக்கு | Big Nose Personality

பெரிய மூக்கு உடையவர்கள், மற்றவர்களுக்கு வேலை செய்யவதை முற்றிலும் வெறுக்கிறார்கள். நீங்கள் மற்றவர்கள் ஆர்டர் போட்டால் அதை கண்டுக்கொள்ள மாட்டீர்கள். உங்களுடைய பாதையில் தான் செல்வீர்கள். பெரிய மூக்கு அதிகாரம், தலைமைத்துவம், ஈகோ மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதைக் காட்டும் பல ஆய்வுகள் உள்ளன. உங்களுடைய இலக்கை அடைய யாருடைய உதவியையும் எதிர்ப்பார்க்க மாட்டீர்கள். எதையும் கட்சிதமாக செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். நீங்கள் ராயல்டியைப் போல வாழ விரும்புகிறீர்கள், ஆனால் நீங்கள் எதற்கும் மனமின்றி செலவிட மாட்டீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்