Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57
Exclusive

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான கண் பராமரிப்பு குறிப்புகள்..

Nandhinipriya Ganeshan October 13, 2022 & 09:00 [IST]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான கண் பராமரிப்பு குறிப்புகள்..Representative Image.

நமது உடல் உறுப்புகளில் மிக முக்கிய அங்கம் வகிப்பது நம் கண்கள் தான். ஆனால், நாமலோ நாள் முழுக்க ஏன் இரவிலும் நம் கண்களுக்கு ஓய்வு என்பதை கொடுப்பதே கிடையாது. இதனால், கண்ணெரிச்சல், கண்கள் வறண்டு போதல், கருவளையங்கள் மற்றும் பார்வை குறைபாடு போன்றவற்றால் நம் கண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த உலகின் பேரழகை உள்ளத்தில் வைத்து ரசிக்கவும், உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவும் நம்முடைய அழகிய கண்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை அல்லவா. இதோ உங்களுடைய கண்களை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான கண் பராமரிப்பு குறிப்புகள்..Representative Image

கண் பராமரிப்பு டிப்ஸ்:

➤ கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். இது கண்களுக்கு மட்டுமின்றி பல உடல் உபாதைகளிலிருந்தும் நம்மைக் காக்கும்.

➤ கண் பார்வையை மேம்படுத்தும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை தினசரி சாப்பிட வேண்டும். உதாரணமாக: பால், முட்டை, கீரை, கேரட், பப்பாளி, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை தினமும் ஜூஸாகக் கொடுக்காமல் அப்படியே சாப்பிட வேண்டும். 

➤ பிறந்த குழந்தைகளுக்கு கண்களில் ஏதாவது பிரச்சனை என்றால், நாட்டு வைத்தியம் என்ற பெயரில் குழந்தைகளின் கண்களில் தாய்ப்பால், எண்ணெய் போன்றவற்றை விடுவதை தவிர்த்துவிட்டு மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

➤ குறைந்த ஒளியில் படிப்பது, வேலை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், வளரும் குழந்தைகள் அதிக நேரம் கணினி மற்றும் மொபைல்களிய பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான கண் பராமரிப்பு குறிப்புகள்..Representative Image

➤ காலை 9 மணிக்கு மேல் வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் கண்களை தக்கி கண்புரை போன்ற பல கண் நோய்களை ஏற்படுத்தலாம். அப்படியே வெளியில் போனாலும் புகை, மாசுபட்ட காற்றிடமிருந்து தப்பிக்க சன் கிளாஸ் பயன்படுத்துவது நல்லது. 

➤ கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போனின் ஒளித்திரையின் பிரைட்னஸ் அளவை மிதமாக வைத்துப் பயன்படுத்துவது நல்லது. சுத்தமில்லாத கைகளால் கண்களைத் தொடவோ, கசக்கவோ கூடாது.

➤ முக்கியமாக, கண்களில் தூசிபட்டால், அவற்றை கண் கழுவ வேண்டும். அதைவிட்டுவிட்டு, கைகளால் கண்களைக் கசக்குவது, துணியால் கண்களைத் துடைப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

➤ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்களைப் பரிசோதித்து, கண் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது நல்லது. அதேபோல், கண்ணாடி போடுபவர்கள் அவரவரின் கண்களுக்கு உரிய லென்ஸ்களை அணிய வேண்டும். 

➤ கண்களுக்கு அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பெண்களை இதை பின்பற்ற வேண்டும். 

➤ மீன்கள் கண்களுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதனால் கண் பார்வை குறைபாடுகள் சரியாகும். எனவே தினமும் உணவில் மீன் சேர்ப்பது நல்லது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான கண் பராமரிப்பு குறிப்புகள்..Representative Image

➤ வயது முதிர்ச்சியால் ஏற்படும் வெள்ளை எழுத்து, கண்ணில் புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் மங்கலாகத் தெரிதல் போன்ற கண் பாதிப்புகள் இயற்கையாகவே ஏற்படும். எனவே, 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. அதேபோல், அவரவர் கண்களுக்கு பொருத்தமான மூக்குகண்ணாடிகளை பயன்படுத்தலாம்.

➤ சோர்வாக இருக்கும் கண்களுக்கு புத்துணர்ச்சி ஊட்ட, சில்லென்ற தண்ணீரை‌ முகம் மற்றும் கண்களில் ஸ்ப்ளாஷ் செய்து 10 முதல் 15 முறை வரை கழுவவும். எப்போதுமே கண்களில் நேரடியாக சூடான அல்லது ஐஸ் தண்ணீரை பயன்படுத்தவேண்டாம்.

➤ கர்ப்பிணி பெண்கள், தினமும் இதமான வெயிலில் நடப்பது நல்லது. அதேபோல் காலையில் சூரிய உதயம் 7 மணிக்கு முன், மாலையில் சூரிய அஸ்தமனம் 6 மணிக்கு மேல் ஆகியவற்றை வெறும் கண்களால் பார்க்கலாம். சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் போன்றவற்றை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

➤ கண் கூசும் அளவு வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது. உற்றுநோக்கிப் பார்க்கும் அளவுக்கு ஒளி குறைவாக உள்ள இடத்தைத் தவிர்ப்பது நல்லது.

➤ தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றால் ஏற்படும் கண் சோர்வைக் குறைக்க, ஒவ்வோர் அரை மணி நேரத்துக்கும் தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்கலாம். இது கண் சோர்வைக் குறைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்