Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வசமாய் மாட்டிக்கொண்ட கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்.. அமலாக்கத்துறை அதிரடி!!

Sekar August 11, 2022 & 17:03 [IST]
வசமாய் மாட்டிக்கொண்ட கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்.. அமலாக்கத்துறை அதிரடி!!Representative Image.

சுமார் 10 பில்லியன் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பத்து கிரிப்டோ பண பரிமாற்ற நிறுவனங்கள் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) லென்ஸின் கீழ் வந்துள்ளன.

பிரபல கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான WazirX-ன் உரிமையாளரான Zanmai Lab Pvt Ltd இன் இயக்குநர்களில் ஒருவரின் வளாகத்தில் ஆகஸ்ட் 5 அன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது மற்றும் அவர்களின் வங்கியில் உள்ள 64.67 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பித்தது. 

அமலாக்கத்துறையின் இந்த சோதனை அடுத்தடுத்து பத்து கிரிப்டோ பண பரிமாற்ற நிறுவனங்களுக்கும் இட்டுச் சென்றது. இதற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கிரிப்டோ பண பரிமாற்ற நிறுவனங்ங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

கணக்கில் காட்டப்படாத வருமானம் மூலம் கிரிப்டோ சொத்துக்கள் வாங்கப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான கிரிப்டோ சொத்துக்கள் இதன் மூலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளது. பின்னர் இந்த கிரிப்டோ சொத்துக்கள் வெளிநாட்டில் மூலம் பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

WazirX நிறுவனத்திடம் இருந்த ரூ.64.67 கோடிக்கு இணையான அசையும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மற்ற கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்களில் இதேபோன்ற பரிவர்த்தனைகள் நடந்ததையும் கண்டறிந்த அமலாக்கத்துறை அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.

கிரிப்டோ பரிமாற்றங்கள் தங்கள் முதலீட்டாளர்களின் KYC செயல்முறையை முடிக்கவில்லை என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அமலாக்கத்துறை சில வாடிக்கையாளர்களின் KYC அடிப்படையில் ஆய்வு செய்தபோது அந்த KYC போலியானவை என்று தெரியவந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்