Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

47th GST Council Meet 2022: இறைச்சி முதல் வாடகை வரை ஜிஎஸ்டி வரி உண்டு..! இன்னும் எந்தெந்த பொருள்களுக்கு தெரியுமா..?

Gowthami Subramani June 29, 2022 & 18:00 [IST]
47th GST Council Meet 2022: இறைச்சி முதல் வாடகை வரை ஜிஎஸ்டி வரி உண்டு..! இன்னும் எந்தெந்த பொருள்களுக்கு தெரியுமா..?Representative Image.

47th GST Council Meet 2022: குடியிருக்கும் வீடு, சாப்பிடக்கூடிய தயிர், பன்னீர், மீன், இறைச்சி, ஹோட்டல் வாடகை உள்ளிட்ட அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது (47th GST Council Meet 2022).

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது. ஜிஎஸ்டி-யால் மாநிலங்களுக்கு ஏற்படக் கூடிய வருவாய் இழப்பீடை ஈடு செய்வதற்காக 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன் படி, இத்துடன் ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற இந்த வேளையில், ஜிஎஸ்டி வரி எந்தெந்த பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காண்போம் (47th GST Council Meeting 2022).

47 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் (How Many GST Council Meeting Held)

ஜிஎஸ்டி இழப்பீட்டை விடுவிக்கக்கூடிய இந்த ஐந்தாண்டு கால அவகாசம் இந்த ஜூன் மாதம் 30 ஆம் நாள் முடிவடைகிறது. அதனால், 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகர் மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. அதன் படி, இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருள்கள்

முத்திரையுடன் பேக்கேஜிங் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படக்கூடிய தயிர், பன்னீர், தேன், இறைச்சி, மீன், கோதுமை உள்ளிட்ட சில உணவுப் பொருள்களுக்கு 5% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிக் காசோலைக்கும் (Cheque) ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

இவ்வாறு பேக்கேஜிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதை மறுபரிசீலனை செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் குழு கேட்டுக் கொண்டது.

இதனை பரிசீத்த பிறகு, இறைச்சி (உறைந்து போனதைத் தவிர), மீன், தயிர், தேன், பன்னீர், உலர் பருப்புவகை, காய்கறிகள், உலர் தாமரை விதை, கோதுமை மற்றும் பிற தானிய வகைகள், பட்டாணி மாவு, கொதுமை அல்லது மெஸ்லின் மாவு, பஃப் செய்யப்பட்ட அரிசி (முரி) வெல்லம் உள்ளிட்ட பொருள்களுக்கும், கரிம உரம் மற்றும் தென்னை நார் உரம் போன்றவற்றிற்கும் 5% ஜிஎஸ்டி வரி விதிக்க கவுன்சில் கூட்டம் முடிவு செய்தது (GST Council Meeting Today Press Release).

காசோலைகளுக்கு வங்கி விதிக்கக் கூடிய கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி,

அட்லஸ் வரைபடம், விளக்கப்படங்களுக்கு 12% ஜிஎஸ்டி எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய், நிலக்கரி, எல்.இ.டி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர் போன்றவற்றிற்கான தலைகீழ் வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது (GST Council Meet 2022 in Tamilnadu).

முத்திரையிடப்படாத, பொட்டலமிடப்படாத பொருள்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு நீட்டிக்கப்படும். மேலும், ஹோட்டல்களில் ரூ.1,000 க்கும் குறைவான வாடகை வாங்கக் கூடிய அறைகளுக்கு வாடகையில் 12% ஜிஎஸ்டி விதிக்கவும் முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் கேமிங், கேசினோ, லாட்டரி ஆகியவற்றுக்கு 25% ஜிஎஸ்டி விதிக்கும் திட்டத்தை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒதுக்கி வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன (Upcoming GST Council Meeting).

இதையடுத்து, இன்னும் சிலவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு விவரங்களை வரும் ஜூலை மாதம் 14 ஆம் நாள் சமர்ப்பிக்கப்படும் எனவும், அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்