Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

47th GST Council Meeting 2022: இன்று தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…! இந்த முறை எதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரும்..?

Gowthami Subramani June 28, 2022 & 19:00 [IST]
47th GST Council Meeting 2022: இன்று தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…! இந்த முறை எதுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரும்..?Representative Image.

47th GST Council Meeting 2022: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி விதிகளை எந்தெந்த பொருள்கள் மீது எத்தனை சதவீதம் அளவு விதிக்கப்படும் என்ற வரைமுறைகளைப் பற்றி அறிவதாகும் (47th GST Council Meeting 2022).

கடந்த ஆண்டு

அதன் படி, இந்த ஜிஎஸ்டி விதிகளுக்கான முதல் கவுன்சில் கூட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் பிறகு வரிசையாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்று அதன் 46 ஆவது கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது (Total GST Council Meeting).

அதனை அடுத்து, இந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

இன்று தொடங்கிய கூட்டம்

அவ்வாறு, இன்று காலை 11 மணியளவில், சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. இதில், பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சராக விளங்கும் பங்கஜ் சவுத்ரி, மத்திய மாநில மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பல பேர் கலந்து கொண்டனர் (GST Council Meet 2022).

ஜிஎஸ்டி எதிர்பார்ப்புகள் (Next GST Council Meeting)

இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரே கூறிய படி, கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் பயன்பாடுகளுக்கு உட்பட்ட வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி வரிகளை விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதனைத் தவிர்த்து, சிறு ஆன்லைன் விநியோகர்களுக்கு பதிவு விதிகளை தளர்த்துவது குறித்த விவரங்களும் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது (GST Meeting Today 2022).

 

 

 

இழப்பீடுக்கான ஆலோசனை

 

 

 

இவற்றை எல்லாம் தவிர முக்கியமாக, சில மாநிலங்களுக்கான இழப்பீடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போனது. பொருளாதார இழப்பீடு பெருமளவு நிகழ்ந்துள்ளதால், இதன் இழப்பீடு குறித்தும் கூறப்படும் என தெரிவிக்கப்படுகிறது (GST Council Meeting Rate Changes).

 

 

 

இது மட்டுமல்லாமல், ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயம் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரிகளை 28% அளவு உயர்த்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைச்சர்கள் சார்பில் குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், குதிரை பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரியை 28% உயர்த்தும் படி கூறப்பட்டுள்ளது (Cryptocurrency GST Rate Update).

 

 

 

இதில், கிரிப்டோகரன்சி மீதான வரி விதிப்பு பற்றிய விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

 

 

 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்