Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாதிக்கும் மேல் அம்பானி வசம்.. அதானி எடுத்தது இவ்ளோ தானா.. 5ஜி ஏலம் அப்டேட்ஸ்!!

Sekar August 01, 2022 & 19:18 [IST]
பாதிக்கும் மேல் அம்பானி வசம்.. அதானி எடுத்தது இவ்ளோ தானா.. 5ஜி ஏலம் அப்டேட்ஸ்!!Representative Image.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தில் ரூ.88,078 கோடிக்கு, விற்கப்பட்ட மொத்த அலைக்கற்றைகளில் கிட்டத்தட்ட பாதியை வாங்கி அதிரடி காட்டியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதானி குழுமம் 400 மெகா ஹெர்ட்ஸ் அல்லது விற்பனையான மொத்த அலைக்கற்றைகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக ரூ.212 கோடிக்கு மட்டுமே வாங்கியது.

அதானி குழுமம் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இது பொது நெட்வொர்க்குகளுக்கு இல்லை. தனது நிறுவனத்தின் தனிப்பட்ட பயன்பாடுகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வாங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

ஜியோவைப் பொறுத்தவரை 6-10 கிமீ சிக்னல் வரம்பை வழங்கக்கூடிய மற்றும் ஐந்தாவது தலைமுறைக்கு ஒரு நல்ல தளத்தை உருவாக்கக்கூடிய 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் உட்பட பல அலைவரிசைகளில் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை நாட்டில் உள்ள அனைத்து 22 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் வாங்கியுள்ளது.

மற்றொரு முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான சுனில் பார்தி மிட்டலின் பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பல்வேறு பேண்டுகளில் ரூ.43,084 கோடிக்கு வாங்கியது.

வோடபோன் ஐடியா லிமிடெட் 18,784 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது. மொத்தத்தில், ரூ.1,50,173 கோடி ஏலம் பெறப்பட்டதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

10 அலைவரிசைகளில் வழங்கப்பட்ட 72,098 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில், 51,236 மெகா ஹெர்ட்ஸ் அல்லது 71 சதவீதம் விற்கப்பட்டது என்றும் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்