Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கஜினி முகமதுவை மிஞ்சிய முயற்சி..! 39 முறை தோல்வியைச் சந்தித்து விடாமுயற்சியால் 40 ஆவது முயற்சியில் கிடைத்த கூகுள் வேலை..!

Gowthami Subramani July 29, 2022 & 11:50 [IST]
கஜினி முகமதுவை மிஞ்சிய முயற்சி..! 39 முறை தோல்வியைச் சந்தித்து விடாமுயற்சியால் 40 ஆவது முயற்சியில் கிடைத்த கூகுள் வேலை..!Representative Image.

உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், இதில் வேலை கிடைக்க ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சி சாதாரணமாக இருக்காது. அந்த வகையிலேயே ஒருவர் கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருந்தார். கூகுளில் வேலை கிடைப்பது என்பது அரிதல்லவே.

இந்த நிலையில், அந்த இளைஞர் வேலைக்காக கூகுள் நிறுவனத்தில் 39 முறை முயற்சி செய்து நிராகரிக்கப்பட்டுள்ளார். கடைசியாக, 40 ஆவது முறை விண்ணப்பித்த போது, வேலை கிடைத்துள்ளது. கூகுள் நிறுவனத்தில் வேலை பெற வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் எடுத்த விடாமுயற்சி குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

முயன்றால் முடியாது எதுவுமில்லை

முயற்சி என்பதே வெற்றிக்கு வித்தாகும். இதை அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் டைலர் கோஹன் என்பவர் நிரூபித்துள்ளார். இவருக்கு கூகுளில் வேலை செய்வதை நீண்ட நாள் கனவாக வைத்திருந்தார். இவர் 39 முறை கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். ஆனால், அனைத்து முறைகளிலுமே நிராகரிக்கப்பட்டார்.

கடைசியாக கிடைத்த வேலை

அவர், விடாமுயற்சியைக் கைவிடாமல், 40 ஆவது முறை கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட அவருக்கு, வேலைவாய்ப்பை வழங்கியது கூகுள். இவர் தனது LinkedIn பக்கத்தில் கூகுளுக்கு அனுப்பிய 39 முறை விண்ணப்பத்தை பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவருக்கு Associate Manager - Strategy & Apps என்ற வேலையை கொடுத்துள்ளது கூகுள்.

தளராத முயற்சி

கடினமாக இருந்தாலும், எளிதாக இருந்தாலும் சரி தளராத முயற்சி இருந்தால், வெற்றி என்பது உறுதியாக இருக்கும். அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனத்தில் டைலர் கோஹன் முதன் முதலாக, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் அன்று விண்ணப்பித்துள்ளார். அதில் நிராகரிக்கப்பட்டு பின், 2019 செப்டம்பரில் இரண்டு முறை விண்ணப்பித்து, இரண்டு முறைகளிலுமே நிராகரிக்கப்பட்டார். பின்னர், கொரோனா தொற்று பரவல் சமயத்தில் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பிக்க தொடங்கினார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்தது நிராகரிக்கப்பட்டு வந்தது.

டைலர் கோஹன் கருத்து

இது குறித்து, டைலர் கோஹன் தனது LinkedIn பக்கத்தில் விடா முயற்சிக்கும் பைத்தியக் காரர்களுக்கும் இடையில் ஒரு சிறு கோடு உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே நாம் இவ்வாறு முயற்சித்தேன். 39 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர், தற்போது கூகுளில் வேலை கிடைத்துள்ளது என்று கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Taylor Cohen Google Scholar | Taylor Cohen Google Scholar Citations | Taylor Cohen | Google | Google Job | Google Jobs | Tyler Cohen | Job at Google


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்