Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த HCL தலைவர்…! 5 ஆம் இடத்தைப் பிடித்த Zoho தலைவர்…

Gowthami Subramani July 28, 2022 & 16:55 [IST]
தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த HCL தலைவர்…! 5 ஆம் இடத்தைப் பிடித்த Zoho தலைவர்… Representative Image.

இந்தியாவின் பெண்களுக்கான பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக, HCL நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் மல்கோத்ரா முதலிடம் வகித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தற்போது பெரியளவில் வணிகம் செய்யும் இன்னும் இரண்டு நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த HCL தலைவர்…! 5 ஆம் இடத்தைப் பிடித்த Zoho தலைவர்… Representative Image

கோடிக்கணக்கில் சம்பாதித்தல்

பெண்கள் இன்று பெரும்பாலும், எல்லா துறைகளிலும் தங்கள் திறமைகளால் வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்கி லட்சம் முதல் கோடி வரை சம்பாதித்து வருகின்றனர். ஐடி சார்ந்த தொழில்கள் மட்டுமல்லாமல், அவரவர்களுக்குத் தெரிந்த வேலைகளிலேயே முன்னிலை பெற்று வகிக்கின்றனர்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த HCL தலைவர்…! 5 ஆம் இடத்தைப் பிடித்த Zoho தலைவர்… Representative Image

HCL நிறுவனத்தின் தலைவர்

இவ்வாறு சாதித்து வரும் பெண்களின் மத்தியில் இந்திய அளவில் பணக்காரர் வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவரான ரோஷ்னி நாடார் பற்றி இதில் காண்போம்.

இந்தியாவில் செல்வாக்கு மிக்க பெண்களாக மட்டுமல்லாமல், செல்வந்தர்களாகவும் விளங்கும் பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அதன் படி, ஜூலை 27 ஆம் நாள் இந்தியாவில் பெண்கள் பணக்காரர் பட்டியலை வெளியிட்டது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த HCL தலைவர்…! 5 ஆம் இடத்தைப் பிடித்த Zoho தலைவர்… Representative Image

இந்தியாவில் பெண்களுக்கான பணக்காரப் பட்டியல்

இந்தப் பட்டியலில், HCL டெக்னாலஜியின் தலைவரான  ரோஸ்னி நாடார்  மல்ஹோத்ரா ரூ.84,330 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து, நைகா (Nykaa) நிறுவனத்தின் தலைவரான ஃபால்குனி நாயர் ரூ. 57,520 கோடி சொத்துக்களைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் கடந்த ஆண்டை விட மிக அதிக அளவிலான சொத்துக்களைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின் மூன்றாவது இடத்தில் Biocon நிறுவனத்தின் தலைவரான கிரண் மஜூம்தார்-ஷா ரூ.29,030 கோடி கொண்டுள்ளார்.

இவ்வாறு Divi Laboratories-ன் நிலிமா மோடபார்ட்டி ரூ. 28,180 கோடியுடன் நான்காவது இடத்திலும், Zoho நிறுவனத்தின் ராதா வேம்பு ரூ.26,620 கோடியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்