Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Adani Joins in 5G Auction List: 5G ஏலத்தில் இறங்கும் அதானி குழுமம்…! ஜியோ, வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் நிலை என்ன..?

Gowthami Subramani July 10, 2022 & 09:15 [IST]
Adani Joins in 5G Auction List: 5G ஏலத்தில் இறங்கும் அதானி குழுமம்…! ஜியோ, வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் நிலை என்ன..?Representative Image.

Adani Joins in 5G Auction List: இந்தியாவில் நடக்கவிருக்கும் 5G ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்பதாக தெரிவித்துள்ளது. அதன் படி, 5G அலைக்கற்றைக்கான ஏலத்தில் முன்னனி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களைத் தொடர்ந்து அதானி குழுமமும் பங்கேற்பது தெரியவந்துள்ளது.

5G அலைக்கற்றை ஏலம்

அதானி குழுமம் வரப்போகும் 5G அலைக்கற்றை ஏலங்களில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், நுகர்வோர் இயக்கத்தில் சேவைகள் தொடங்குவதற்காக இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

பல்வேறு படிநிலைகளைத் தாண்டி இந்தியா தனது 5G சேவைகளை வெளியிட தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்த 5G சேவைக்கான ஏலம் ஒன்று நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்கக்கூடிய விண்ணப்பதாரர்களில் தாமும் ஒருவர் என அதானி குறிப்பிடுள்ளார்.

மேலும், இதில் குறிப்பாக, நுகர்வோர் இயக்கத்தில் இருக்கக்கூடாது என்பது இவர்களுடைய நோக்கம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

தனியார் நெட்வொர்க்

இது குறித்து அதானி குழுமம் கூறியதாவது, “விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் இன்னும் பிற வணிகங்களில் பரிமாற்றம் போன்றவற்றில் தனியார் நெட்வொர்க் தீர்வுகளை வழங்குவதற்கு இந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்கிறோம்” என கூறியுள்ளது.

இந்த ஏலத்தில் 5G ஸ்பெக்ட்ரத்தைப் பெறுவதற்கு, அதானி குழுமம் கிராமப்புறங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு  போன்றவற்றில் அதானி குழுமத்தின் முதலீடுகளை கணிசமாக அதிகரிப்பதற்கு இது ஒத்துப் போகும் எனக் கூறியுள்ளது.

5G தேவைப்பயன்பாடுகள்

சூப்பர் ஆப்ஸ், தொழில்துறை கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் போன்றவற்றை உருவாக்குவதற்கு, வணிகங்களுக்குத் தேவையான அதிக அதிர்வெண் மற்றும் குறைந்த லேட்டன்சி 5G போன்றவற்றின் மூலம் ஸ்ட்ரீமிங் திறன்கள் தேவைப்படுகிறது.

மற்ற நிறுவனங்கள்

தொலைத் தொடர்பு நிறுவனங்களாக விளங்கும் பார்தி, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, மற்றூம் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுப்பதற்காக விருப்பம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஏலத்தில் அதானி குழுமம் பங்கேற்றது, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்