Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாள்கள்…. அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்…!

Gowthami Subramani October 26, 2022 & 13:20 [IST]
நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாள்கள்…. அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்…!Representative Image.

மாதந்தோறும், வங்கி விடுமுறை நாள்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், வரும் நவம்பர் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறை என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

அக்டோபர் மாதத்தைப் பொறுத்த வரை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, மிலாடி நபி, தீபாவளி என விடுமுறை நாள்கள் அதிகம் இருக்கும். ஆனால், நவம்பர்மாதத்தில் சனி, ஞாயிறு தவிர வேறு சில சிறப்பு விடுமுறைகள் என எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒவ்வொரு மாதம் தொடங்குவதற்கு முன்னரே, நாம் அனைவரும் வங்கி விடுமுறை நாள்கள் குறித்த விவரங்களைப் பெற்றிருக்க வேண்டும். அதன் படியே, வங்கி சம்பந்தமான வேலைகளைத் திட்டமிட்டு முன்னரே முடிக்க முடியும்.

அதன் படி, இந்த நவம்பர் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறைகள் தவிர வேறு எந்த விடுமுறையும் இந்திய அளவில் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை

தேதி

வங்கி விடுமுறை

நவம்பர் 1

கன்னட ராஜ்யோத்சவா குட் -  பெங்களூர், இம்பால் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

நவம்பர் 6

ஞாயிறு விடுமுறை

நவம்பர் 8

குருநானக் ஜெயந்தி/கார்த்திகை பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா - ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஷ்வர், சண்டிகர், டேராடூன் மற்றும் ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

நவம்பர் 11

கனகதாச ஜெயந்தி / வாங்கல விழா – பெங்களூர், இம்பால், மற்றும் ஷில்லாங் பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

நவம்பர் 12

இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

நவம்பர் 13

ஞாயிறு விடுமுறை

நவம்பர் 20

ஞாயிறு விடுமுறை

நவம்பர் 23

செங் குட்ஸ்னெம் – ஷில்லாங் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை

நவம்பர் 26

நான்காவது சனிக்கிழமை விடுமுறை

நவம்பர் 27

ஞாயிறு விடுமுறை

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்