Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி வீடு தேடி ஆதார் சேவை… தமிழக அரசின் மகத்தான திட்டம்..!

Gowthami Subramani [IST]
இனி வீடு தேடி ஆதார் சேவை… தமிழக அரசின் மகத்தான திட்டம்..!Representative Image.

வீடு தேடி ஆதார் கார்டு பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆதார் கார்டு

டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய ஒரு அங்கமாக விளங்குவது ஆதார் கார்டு ஆகும். இது இந்தியர்களுக்கான ஒரு அடையாள ஆவணமாக கருதப்படுகிறது. மேலும், ஆதார் கார்டை சில முக்கிய ஆவணங்களான, சிம் கார்டு, பான் கார்டு, வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றில் ஆதார் கார்டு இணைக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுதல், இன்னும் சில பல்வேறு அரசு சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆதார் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

அப்ளை செய்வது எப்படி?

ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் ஏதேனும் அப்டேட் செய்வதாக இருப்பின், ஆன்லைனில் அப்ளை செய்து கொள்ளலாம். இதுவே, புதிதாக ஒருவர் ஆதார் அட்டை விண்ணப்பித்தல் அல்லது புதிதாக தொலைபேசி எண்ணை இணைத்தல் உள்ளிட்டவற்றிற்கு நேரில் சென்று அணுகி பயன்பாட்டைப் பெறலாம். அந்த வகையில், தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

சிறு குழந்தைகளுக்கும்

மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, தற்போது சிறு குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. இப்போதெல்லாம், பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.

யார் பயனடையலாம்?

தமிழக அரசு அறிவித்துள்ள வீடு தேடி ஆதார் கார்டு சேவை திட்டத்தை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும். இந்த சிறப்பான திட்டத்தின் கீழ், பதிவு செய்த குழந்தைகளின் பயோ மெட்ரிக் விவரங்கள் ஆதார் அதிகாரிகள் வீடு தேடி சென்று சேகரிப்பார்கள். இந்த சிறப்பான திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே படியே ஆதார் எடுக்கலாம்.

குழந்தைகளுக்காக வழங்கப்படும் இத்திட்டத்தில், ஆதார் பதிவு அங்கன்வாடி பணியார்களின் உதவி கொண்டு ஆதார் பதிவு செய்யும் பணியில் உதவுவதால், ஆதார் பதிவு இன்னும் பிரபலமாகும் என கூறப்படுகிறது. வீடுகளுக்கே சென்று ஆதார் பதிவு செய்யும் குழந்தைகளுக்கான இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Can I Apply Aadhar Card From Home | 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்