Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கொத்து கொத்தாக பணிநீக்கம்...செய்யும் நிறுவனங்களுள் அடுத்தது Amazon தான்...20,000 ஊழியர்களை பணிநீக்கம்!

Priyanka Hochumin Updated:
கொத்து கொத்தாக பணிநீக்கம்...செய்யும் நிறுவனங்களுள் அடுத்தது Amazon தான்...20,000 ஊழியர்களை பணிநீக்கம்!Representative Image.

உலகின் முக்கிய நிறுவனங்களுள் அடுத்தடுத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமேசான் நிறுவனத்தில் மட்டும் மொத்தம் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலை முதலில் துவங்கியது எலான் மஸ்க் தான். ட்விட்டரை கையில் எடுத்த பிறகு நிறுவனத்தின் முக்கிய நபர்களை வெளியற்றியதோடு பல நிபந்தனைகளை சொல்லி ஊழியர்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டார். அதனை தொடர்ந்து கூகுள், மெட்டா, பேஸ்புக், ஹெச்பி, சிஸ்கோ இந்த வரிசையில் தற்போது அமேசானும் சேர்ந்துவிட்டது. எதனால் இந்த முடிவு, இது உண்மையா போன்ற அனைத்து விவரங்களையும் பற்றி பாப்போம்.

அமேசான் நிறுவனத்தின் CEO ஆண்டி ஜாஸ்ஸி, ஏற்கனவே தி நியூயார்க் டைம்ஸிடம் அளித்த பேட்டியில் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சமீபத்தில் வெளியான தகவலில் அந்த கணிப்பு 2 மடங்காகியுள்ளது. இதில் நிறுவனத்தின் அடிமட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் முதல் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை இருக்கும் அனைத்து மட்டங்களில் இருந்து பணிநீக்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணமே தொற்றுநோய் பரவல் காலத்தில் அதிக பேரை வேளைக்கு எடுத்து தான். மேலும் தற்போது ஏற்படும் பங்குச்சந்தை ஏற்றம் இரக்கத்தை சரி செய்ய செலவுகளை குறைக்க முடிவெடுத்துள்ளனர். அதனின் வெளிப்பாடு தான் கொத்தோட பணிநீக்கம் செய்யப்படுவது. மேலும் கார்ப்பரேட் ஊழியர்களில் 6 சதவீதம் பேர், அமேசானின் 1.5 மில்லியன் பணியாளர்களில் சுமார் 1.3 சதவீதம் பேர், இதில் உலகளாவிய விநியோக மையம் மற்றும் மணிநேர பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர். வரும் ஆண்டில் இந்த முடிவு அமலுக்கு வரும் என்பதால் அனைத்து ஊழியர்களும் கவலையில் இருக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்