Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜனவரி மாதம் 2023 இல் பாதி நாட்கள் வங்கிகள் இருக்காது தெரியுமா..?

Manoj Krishnamoorthi Updated:
ஜனவரி மாதம் 2023 இல்  பாதி நாட்கள் வங்கிகள் இருக்காது தெரியுமா..?Representative Image.

ஜனவரி 1 2023 ஞாயிற்றுக்கிழமை பிறந்தது. இதை உலகம் முழுவதும் நள்ளிரவு முதல் வரவேற்று கொண்டாடினர். இந்த 2023 ஆண்டின் முதல் மாதமே வங்கி பாதி நாட்கள் கூட செயல்படாது என்பது பற்றி தெரியுமா.... இதுகுறித்து முழுமையாக அறிய இந்த பதிவை பின்தொடரவும். 

ஜனவரி மாதம் 2023 இல்  பாதி நாட்கள் வங்கிகள் இருக்காது தெரியுமா..?Representative Image

Bank in 2023

பொதுவாக மக்கள் பணப்பரிவர்த்தனை சார்ந்த வரவு செலவு எல்லாம் வங்கியில் தான் வைத்திருப்பர். அதுவும் சேமிப்புக்காக வங்கியை பயன்படுத்துவோர் முதல் வியாபார ரீதியாக வங்கியை பயன்படுத்துவர் வரை வங்கியின் பயன்பாடு அதிகம். பொதுவாக வங்கி சனி, ஞாயிறு விடுமுறை என்றாலே முன் ஏற்பாடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதுவே வங்கி செயல்பாடு என தெரியாமல் பல முறை சென்று திரும்பிய நாட்களும் இருந்திருக்கும். 

இந்த 2023 ஜனவரி மாதம் வங்கிகள் அதிகமான விடுமுறையை சந்திக்க உள்ளது. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, 2வது மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை அல்லது சில அரசு விடுமுறைகளும் உள்ளது. ஜனவரி முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும்.... இந்த மாத தை திருநாள், குடியரசு தினவிழா போன்ற முக்கிய விடுமுறைகளும் உள்ளது. அவை எந்தெந்த நாட்கள் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத விடுமுறை

ஜனவரி 1- புத்தாண்டு விடுமுறை

ஜனவரி 8- ஞாயிறு

ஜனவரி 14- 2வது சனிக்கிழமை விடுமுறை

ஜனவரி 15- தை திருநாள்

ஜனவரி 16- மாட்டுப் பொங்கல்

ஜனவரி 17- உழவர் திருநாள்

ஜனவரி 22- ஞாயிறு

ஜனவரி 26- குடியரசு தின விழா

ஜனவரி 28- 4வது சனிக்கிழமை

ஜனவரி 29- ஞாயிறு

இதனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டலில் சில மாநில வங்கிகள் இந்த பொது விடுமுறையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஜனவரி மாதம் 10 நாட்களுக்கு வங்கி விடுமுறையில் இருக்குமாம். அது மட்டுமின்றி மாநில விழா காரணமாக எதாவது விடுமுறை வந்தால் இந்த விடுமுறை தினங்கள் அதிகரிக்கும். எனவே, ஜனவரி மாதம் அரசு விடுமுறை அதிகமாக உள்ளதால் வங்கி சார்ந்த வர்த்தனையில்  திட்டமிட்டு கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்