Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?

Priyanka Hochumin Updated:
Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image.

சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாகும். ஏனெனில், அப்போது தான் இந்த சமுதாயத்தில் நமக்கு அந்தஸ்து கிடைக்கிறது. அதற்கு பின்னர் தான் நமக்கு வேண்டிய அனைத்தையும் நம்மால் பெற முடியும். ஆனால் இப்போது இருக்கும் விலை வாசி ஏற்றத்தால் மனை வாங்கவே கடினமாக இருக்கிறது, இது தவிர கட்டுமான பொருட்கள், கூலி என்று நிறைய இருக்கிறது. அப்போ நாம் சேமித்த பணத்தை வைத்து வீடு கட்ட நினைப்பது சரியான முடிவு இல்லை. இதற்காகவே இருக்கிறது வீட்டுக் கடன் (Home Loan).

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image

நமக்கு கைகொடுக்கும்... | Guidance for Home Loan

இந்த காலகட்டத்தில் மிகவும் சுலபமாக நமக்கு வீட்டுக் கடன் கிடைக்கிறது. நாம் இருக்கும் இடத்திற்கு வந்து, அனைத்து ஆவணங்களையும் காட்டி அவர்களே லோன் தருகின்றனர். எனவே, நமக்கு பிடித்த இடத்தில் மனை வாங்கி வீடு கட்ட ஆரம்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவராக இருந்தால் சீக்கிரம் கடனை கட்டி முடித்து விடலாம். குறைவான காலத்தில் வீடும் நமக்கு சொந்தமாகிவிடும்.

வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு வாடகை, தண்ணீர், கரண்ட் என்று தனி தனியாக பணம் செலுத்த வேண்டியது இருக்கும். இதுவே சொந்த வீடு என்றால் நிரந்தர முகவரி நமக்கு கிடைத்துவிடும். பின்னர் மீட்டர் பெட்டியில் இருக்கும் கணக்கை வைத்து தண்ணீர், கரண்ட் ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்தினால் போதும். நம் வீட்டிற்கேற்ப நம்மால் செலவு செய்ய முடியும் சொந்த வீடு இருந்தால்.

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image

வட்டியில் இவ்ளோ வேறுபாடா? | Home Loan Eligibility

அண்மையில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 7% ஆக இருக்கிறது. இதுவே 1995 இல் பார்த்தீர்கள் என்றால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 17-18% என்றும், 2000 ஆம் ஆண்டில் 12-15% என்றும் இருந்தது. அத்துடன் ஒப்பிடுகையில் இப்போது இருக்கும் வட்டி குறைவு தான். இதனைக் கொண்டு பார்க்கையில் வீட்டுக் கடன் ரூ.30 லட்சம் என்றால் நீங்கள் மாதம் வட்டி ஏறத்தாழ ரூ.42,000/- கட்ட வேண்டும். இது நீங்கள் வாங்கும் சம்பளத்தில் நான்கில் மூன்று பங்காக இருக்கும். இதுவே 7% வட்டியாக இருந்தால் மாதம் ரூ.26,965/- காட்டினால் போதும். மீதம் இருக்கும் பணத்தை வைத்து குடும்பத்திற்கான மாத செலவை நம்மால் ஈடுகட்ட முடியும்.

இதற்கு முக்கிய காரணம், ஒருவருக்கு வீடு முக்கியம் என்பதால் மத்திய ரிசர்வ் வங்கியானது வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைவாக வைத்திருக்கிறது.

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image

அதிக கால அவகாசம்! | Home Loan Interest Rate

நாம் பர்சனல் லோன் எடுத்தால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். இதுவே வீட்டுக் கடன் தரும் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் 20 அல்லது 30 ஆண்டுகளுக்குள் கடனை கட்டி முடிக்க அனுமதிக்கிறது. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் - வீட்டுக் கடன் வாங்குவோருக்கு 40 ஆண்டுகள் வரை கால அவகாசம் தருகிறது. இப்படி இருக்கையில் மாத தவணை குறைவாக இருப்பதால் நமக்கு வசதியாக இருக்கும்.

இது நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கும், மாத வருவாய் குறைவாக வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வங்கிகளுக்கும் நீண்ட காலம் வட்டி வருவாய் கிடைக்கும். 

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image

கூடுதல் வசதி... | Real Estate Asset

நாளாக நாளாக விலை வாசி ஏறிக்கொண்டே தான் இருக்கும். எனவே, நீண்ட கால வீட்டுக் கடன் என்பதால் மனை மற்றும் வீட்டின் மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது நமக்கு மிகவும் லாபமாக இருக்கும். ஒரு சிலர் இதற்காகவே சொந்த வீடு கட்ட அல்லது வாங்க நினைக்கின்றனர். மேலும் வீட்டின் முக்கிய ஆவணங்களை அடமானம் வைத்து தான் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனங்களில் கடன் வாங்கி இருப்போம். எனவே, கூடுதல் கடன் ஏதேனும் வேண்டும் என்றால் நமக்கு தாராளமாக கடன் தருவார்கள். ஏனெனில் வீட்டின் மதிப்பு தான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Home Loan | ஹோம் லோன் வாங்குவது சாதகமா? பாதகமா?  Representative Image

ஆக சொந்த வீடு வாங்க ரெடியா? | Housing Loan

நீங்கள் ஹோம் லோன் வாங்கிய பின்னர் சிறிது காலம் உங்களுக்கு சமாளிக்க கடினமாக இருக்கும். காரணம் வரும் வருவாயில் என்ன செய்யலாம் என்று குழப்பமாக இருக்கும். ஆனால் சில ஆண்டுகளில் உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து விட்டால், எளிமையாக சமாளிக்கலாம். மீதம் உள்ள வட்டி மற்றும் அசலை கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் நம்மால் கட்டி முடிக்க முடியும்.

வீட்டுக் கடன் வாங்குகையில் இவ்ளோ நன்மைகள் இருக்கையில், நாம் ஏன் சொந்த வீட்டிற்கான முயற்சியை எடுக்க கூடாது. ஹோம் லோன் பற்றிய முழு விவரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்