Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Byjus Latest News: அமெரிக்காவின் Chegg Inc. -ஐக் கையகப்படுத்த நினைக்கும் Bujus நிறுவனம்…!

Gowthami Subramani May 17, 2022 & 22:30 [IST]
Byjus Latest News: அமெரிக்காவின் Chegg Inc. -ஐக் கையகப்படுத்த நினைக்கும் Bujus நிறுவனம்…!Representative Image.

Byjus Latest News: பைஜுஸ் நிறுவனம் இந்தியாவின் ஆன்லைன் பள்ளிக்கல்வி தொடங்கி, இன்று பெருமளவில் எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது அமெரிக்காவில் இயங்கும் ஆன்லைன் பள்ளிக்கல்வியைக் கையகமிடத் திட்டமிட்டுள்ளது.

அதன் படி, அமெரிக்காவின் மிகப் பெரிய பள்ளிக்கல்வித் தளமாக விளங்கக் கூடிய கலொபோர்னியாவைச் சேர்ந்த செக் மற்றும் லான்ஹாம், மேரிலாந்தில் இயங்கும் 2U போன்ற நிறுவனங்களை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு, பெங்களூரைத் தளமாகக் கொண்ட நிறுவனம், செக் மற்றும் 2U நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. மேலும், இந்த ஒப்பந்தத்தின் ஒட்டு மொத்த மதிப்பு சுமார் $2 பில்லியன் ஆக இருக்கலாம் எனக் குறிப்பிடப்படுகிறது (Byjus US Target).

Chegg-ன் சந்தை மதிப்பு $2.3 பில்லியனாக இருந்தது. மேலும், 2U-ன் சந்தை மதிப்பு $756 மில்லியனையும், $1 பில்லியனுக்கும் அதிக அளவிலான கடன் மற்றும் பிற பொறுப்புகளைக் கொண்டிருந்தது.

இவ்வாறு இந்த இரண்டு நிறுவனங்களையும் ஏலத்தில் வாங்க முடிவு செய்யும் பைஜுஸ், அந்த நிறுவனங்களின் நிதி நிலைகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ஒரு சில வாரங்களுக்குள் இதற்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் கூறப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், ஒப்பந்தம் இறுதியாக நிறைவேறாது எனக் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், பைஜுஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. அதே சமயம், Chegg மற்றும் 2U கருத்துக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை.

இது குறித்து, ப்ளூம்பெர்க்ஸ் செய்திக்குறிப்பில், ரவீந்திரன் வெளியிட்ட கருத்துப் படி உலகிற்கு மிகப் பெரிய எட்டெக் நிறுவனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.

Chegg மற்றும் 2U இரண்டு நிறுவனங்களும் ஜூலை மாதம் முதல் 75% அளவிற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தன. இந்த இரு நிறுவனங்களை ஏலம் எடுப்பதன் மூலம் ஒரு பெரிய லாபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், Chegg மற்றும் 2U என்ற இந்தப் பெரிய பள்ளிப்படிப்பிற்குள் ஏராளக்கணக்கான அறிஞர்கள் நுழைவதன் மூலம் பைஜுஸ் நிறுவனத்தின் முன்னேற்றம் இன்னும் கூடுதல் அடையும். கடந்த 2005 ஆம் ஆண்டு, அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டி கல்லூரி மாணவர்களால் நிறுவப்பட்டது. மேலும், முதன்மையாக விளங்கும் செக் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்த அளவிலான விலையைக் கொண்ட பாடப்புத்தகங்களை வாடகை சேவையாகத் தொடங்கி, இன்று ஆன்லைன் பாடநெறி மற்றும் பயிற்சிக்கு ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது (Byjus US Acquisition).

2008-ல், 2U நிறுவனம் என்பது edX என்ற ஆன்லைன் படிக்கும் தளம் உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மின்-கற்றல் மூலம் பாடத்திட்டங்களை வடிவமைத்து வழங்குவதற்கான கருவிகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தை ஏலம் எடுப்பதன் மூலம், Byjus நிறுவனம் முன்னேற்றம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்