Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Car24 removes 600 employees : பெர்பார்மன்ஸ் சரியில்ல.. 600 பேர் திடீர் பணி நீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த கார்ஸ் 24!!

Sekar May 19, 2022 & 16:53 [IST]
Car24 removes 600 employees : பெர்பார்மன்ஸ் சரியில்ல.. 600 பேர் திடீர் பணி நீக்கம்.. அதிர்ச்சி கொடுத்த கார்ஸ் 24!!Representative Image.

Car24 removes 600 employees : இந்தியாவின் பிரபலமான செகண்ட் ஹேண்ட் கார்களை விற்கும் இ-காமர்ஸ் தளமான கார்ஸ்24, தனது ஊழியர்கள் 600 பேரை சரியாக வேலை செய்யாத காரணத்திற்காக வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்ஸ்24 இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்த சமயத்தில், 600 பேரை ஒரே நேரத்தில் பணியிலிருந்து நீக்கியுள்ளது ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

எனினும் இது வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்று தான் என்றும், இதுபோன்ற வெளியேற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் என்றும் கார்ஸ்24 செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் இதை பணிநீக்கம் என்று என்று முத்திரை குத்துவதற்கு மறுப்பு தெரிவித்தார்

வேலையை விட்டுச் செல்லுமாறு கேட்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவலறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஜூனியர் நிலை பதவிகளில் இருப்பவர்கள் எனத் தெரிகிறது.

2015 இல் நிறுவப்பட்ட கார்ஸ்24, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கவும், விற்கவும் மற்றும் நிதியளிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. பணிநீக்கங்களுக்கு முன்பு, கார்ஸ்24 9,000 ஊழியர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்