Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Business Success Tips in Tamil: இந்த ஐந்து விஷயம் தெரிஞ்சா… கண்டிப்பா பிசினஸில் வெற்றி உறுதி…!

Gowthami Subramani [IST]
Business Success Tips in Tamil: இந்த ஐந்து விஷயம் தெரிஞ்சா… கண்டிப்பா பிசினஸில் வெற்றி உறுதி…!Representative Image.

Business Success Tips in Tamil: தொழில்கள் செய்யும் நோக்கத்துடன் இன்று ஏராளக்கணக்கான தொழில் முனைவோர்கள், தங்களது திறமைகளைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

கூகுள் தேடலில் முதலில் இருப்பது

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, கூகுள் தேடலில் மிக அதிகமாக தேடப்படுவது எப்படி வேலை பெறுவது என்று தான். இதற்கான முதன்மை காரணம் கொரோனா பேரிடர் தான். கொரோனா தொற்றால், ஏராளக்கணக்கானோர் பணியிழந்து வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக் கொண்டிருந்தனர். அவற்றுள் புதிதாக நாம் ஏன் தொழில் தொடங்கக் கூடாது என சிந்தித்தவர்கள் ஏராளம். அவ்வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் கூகுள் அதிகமாக தேடப்பட்டது, எப்படி தொழில் தொடங்குவது என்பது தான் (Business Success Tips in Tamil).

தொழில் தொடங்க தேவையானவை

அவ்வாறு இந்த உலகத்தில், பிசினஸ் செய்ய முனைவோர்கள் ஏராளம் வளர்ந்து வந்து கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால், இதில் பலவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியமாகிறது (How to Success in Business in Tamil). புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அல்லது தொழில் தொடங்கிய அனைவருமே, இந்த விவரங்களைப் பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். பின்வரும் இந்த பாயின்டுகளைப் பயன்படுத்தி, தொழிலில் எவ்வாறு முன்னேறலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தொழிலில் வெற்றி பெறுவதற்கான சில முறைகள்

மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு (Patience & Commitment)

புதிய தொழில் தொடங்குவதில், மிக முக்கியம் மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதாகும். அதாவது, மிகுந்த ஆர்வம் என்பது ஏதோ வேலையைத் தொடங்கி விட்டோம். வெற்றி அடைந்தால் சரி. இல்லையென்றால் இல்லை. என்றெல்லாம் கூறுவது கிடையாது. தொழிலில் முழு ஆர்வத்தைக் கொடுக்க வேண்டும். தொழில் ஆரம்பிக்கும் நாளிலிருந்து அதற்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அதில் உள்ள ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து ஆராய்ந்து, அதனை வெற்றிப்பாதையில் எப்படி செலுத்தலாம் என்பதைப் பற்றிய சிந்தனையில் இருப்பதாகும். நம்மை அர்ப்பணிக்கும் எதிலும் நாம் தோல்வியடைய மாட்டோம். எனவே, நமது தொழிலைச் சிறப்பான முறையில் கொண்டு செல்ல மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு இரண்டுமே அவசியம் (Business Development Tips in Tamil).

மதிப்பை உருவாக்குவது

மதிப்பை உருவாக்குவதற்குத் தொழில் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, மதிப்பை மேம்படுத்துவது என்பது, நம் செய்யும் தொழிலை மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றுவதாகும். அதாவது, தொழில் முனைவோர் செய்யக் கூடிய தொழில் மூலமாகப் பயன்பெறுபவர்கள் இரண்டு முக்கிய பயன்களைப் பெறக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அதில் ஒன்று, நம்முடைய தொழிலின் பலன்கள் யாருக்காக இதைச் செய்கிறோமோ.. அவர்களுடைய கஷ்டத்திற்குத் தீர்வு அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகவோ இருக்க வேண்டும் (Own Business Ideas in Tamil).

இந்த இரண்டு செயல்முறைகளின் மூலம், நம்முடைய தொழிலால் பலன்பெறுபவர்களும் பலன் பெறுவர். அதே சமயம், நம் தொழிலுக்கான மதிப்பும் மேம்படும். ஏதாவதொரு ஒன்றைச் செய்வதன் மூலம் Customers-களுக்குத் தீர்வு அளிக்க முடியாது. Customers- களின் பிரச்சனைகள் என்னவென அறிந்து அந்த தீர்வை அளிப்பதன் மூலம் மதிப்பை மேம்படுத்த முடியும்.

மார்க்கெட்டிங், சேல்ஸ் மற்றும் ஃபைனான்ஸ்

தேவையானவற்றை அளித்தும், தொழிலில் வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கீழ்க்கண்டவற்றைத் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்துவதன் மூலம் வெற்றி பெறலாம் (Self Business Ideas in Tamil).

Product-ஐ நாம் தயாரிப்பதும், அதை நம் உடனே வைத்துக் கொள்வதிலும் வெற்றியைப் பெற முடியாது. Customers-க்கு உபயோகப்படுவது கண்டிப்பாக அவர்களைச் சேர வேண்டும். இதனால், முதலில் Product மார்க்கெட்டிங் நிலைக்குப் போக வேண்டும். இரண்டாவது விற்பனை. விற்பனை என்பது நம்மைத் தேடி வரும் நபர்களை வாடிக்கையாளராக மாற்றிக் கொள்வது. இவ்வாறு நம்முடைய ப்ராடக்டை, மார்க்கெட்டிங் செய்து விற்பனைக்குக் கொண்டு செல்வதன் மூலம் நாம் வருமானத்தை ஈட்டலாம்.

ஒரு சில நிறுவனங்களில் வருமானம் கிடைக்கும் போதும், தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். அதற்கான காரணம், நிறுவனத்தின் வரவு, செலவுகளை அறிந்திராமல் இருப்பது. தொழிலை வெற்றி பெற செய்வதில் அனைவரும் முதலில் கேட்கக் கூடியது ஃபைனான்ஸ் ஆகும். ஏனெனில், எவ்வளவு தான் வருமானத்தை ஈட்டினாலும், அதன் மேனேஜ்மென்ட் சரியாக இல்லாத போது தொழில் நஷ்டத்தில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் (Marketing Meaning in Tamil).

அளவீடு

தொழிலில் அளவீடு என்பது மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, வாடிக்கையாளர்கள் திருப்திகரமாக உள்ளார்களா என்பதை அளக்க வேண்டும். தொழிலைப் பொறுத்த வரை எதில் அளந்து செயல்படுகிறோமோ, அதில் வெற்றி பெறுவோம் எனக் கூறுவர். இதனால், அளவீடு என்பது எந்தத் தொழிலாக இருந்தாலும் முக்கியமானதாகும்.

கற்றல் அமைப்பு

தற்போது வளர்ந்துவரக் கூடிய செயல்பாடுகளில் கற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, நாம் செய்யும் தொழிலில், எவ்வாறு ஸ்மார்ட் ஆக பணிபுரிந்து நமது அமைப்பை மேம்படுத்தலாம் என்று  சிந்திக்க முடியும் (Business Meaning in Tamil). உதாரணமாக, ஸ்மார்ட்போன்களுக்கு முன்னாள் நோக்கியோவைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது பெருகி வரும் அமைப்பால், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாகி, முன்னிலை வகிக்கின்றன. இதில் அனைவரும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, நாம் நமது தொழில் சார்ந்த பிரிவினைப் பற்றிய அனைத்தும் கற்றுக் கொண்டிருத்தல் அவசியம்.

மேற்கூறிய தொழிலில் முன்னேறுவதற்கான வழிமுறைகளை நினைவில் வைத்துக் கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக வெற்றி பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்