Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மத்திய அரசின் அப்டேட்...பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி...இதுவும் போச்சா!

Priyanka Hochumin Updated:
மத்திய அரசின் அப்டேட்...பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி...இதுவும் போச்சா!Representative Image.

இந்தியாவில் இத்தனை ஆண்டுகளாக சிறுபான்மை மாணவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 1329.2 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு முதல் 1-8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.

இந்த முடிவு எடுக்க காரணம், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வழங்கப்படுகிறது. மேலும் மத்திய சமூகநல மற்றும் பழங்குடியின மேம்பாடு அமைச்சகத்தின் சார்பில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதால் அதனை பின்பற்றுவோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் ஏராளமான மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். எப்போது முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்